அனைத்து இடங்களிலும் நாம் வெற்றிபெறுவோம்-மாவை சேனாதிராஜா-(படங்கள் இணைப்பு)
யாழ் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மதியாபரணம் சுமந்திரன் ஆகியோர் இன்றுபிற்கல் 2.45மணியளவில் யாழ். கச்சேரியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா அவர்கள், மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள். எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது. நாங்கள் அனைத்து இடங்களிலும் வெற்றிபெறவோம் என்றார். யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மதியாபரணம் சுமந்திரன், என்.சிறீகாந்தா, ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவஞானம் சிறீதரன், அருந்தவபாலன், மதினி நெல்சன் (பருத்தித்துறை, பிரதேசசபை அங்கத்தவர்), ந.அனந்தராஜ் (முன்னாள் தலைவர், வல்வெட்டித்துறை நகரசபை) ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.