26ஆவது வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள்.!(படங்கள் இணைப்பு)
 விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தலைவர்கள், போராளிகள், பொதுமக்களை நினைவு கூறும் “வீரமக்கள் தினம்” இன்று வவுனியா கோவில்குளம் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவகத்தில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுதினமான கடந்த 13ம் திகதிமுதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுதினமான இன்றுவரை (16-07) வீரமக்கள் தினம் நினைவுகூரப்படுகின்றது.
26ஆவது வருடமாக நடைபெற்ற வீரமக்கள் தினத்தின் இன்றைய நிகழ்வின்போது நினைவுச்சுடர் ஏற்றல், மலரஞ்சலி, கவி அரங்கு, நடன நிகழ்ச்சி என்பன இடம்பெற்றதுடன், புளொட் தலைவரின், தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை உள்ளடக்கிய விசேட உரையும் இடம்பெற்றது.