Posted by plotenewseditor on 13 December 2015
Posted in செய்திகள்
பாகிஸ்தானின் பழங்குடிகள் பகுதியில் குண்டு வெடிப்பு – 15 பேர் பலி
பழங்குடிகள் பிரதேசமான குர்ரம் பகுதியின் தலைநகர் பராச்சினாரிலுள்ள துணிகள் அங்காடியில் இடம்பெற்ற இந்தக் குண்டு வெடிப்பில் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
குண்டு வெடிப்பு காரணமாக அந்த அங்காடி சிதறிப் போனது.
இச்சமவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தமது பிடியில் கொண்டுவந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள இந்த நகரத்தில் ஷியாப் பிரிவு முஸ்லிம்களே பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். எனினும் அங்கு இன ரீதியில் பல்தரப்பட்ட மக்கள் இணந்து வாழ்ந்து வந்தாலும், ஷியா மற்றும் சுன்னிப் பிரிவு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த எடுக்கப்பட்டிருந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
தாக்குதல் இடம்பெற்றுள்ள குர்ரம் பகுதி, வடக்கு வாசிரிஸ்தானுக்கு அருகேயுள்ளது. அங்கு தாலிபான்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கையை பாகிஸ்தானிய இராணுவம் கடந்த 18 மாதங்களாக எடுத்து வந்தது.
இதையடுத்து பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் வன்முறைகள் குறைந்துள்ளது போலக் காணப்படுகிறது.
ரஷ்ய மனநல மருத்துவமனையில் தீ விபத்து பலர் உயிரிழப்பு
ரஷ்யாவின் தென்பகுதியிலுள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
அங்கிருந்த மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தில் இருபதுக்கும் அதிகாமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
நாட்டின் தென் பகுதியிலுள்ள வாரந்ஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்த மனநல மருத்துவமனை, முழுமையாக மரப் பலகையினால் கட்டப்பட்டிருந்தது .
இந்த விபத்தில் கட்டடம் முழுமையாக அழிந்துள்ள நிலையில், விபத்திற்கான காரணம் இன்னமும் தெளிவில்லாமல் உள்ளது.
ரஷ்யா முழுவதிலும் அரச நிறுவனங்கள் பலவற்றில் சமீபத்தைய வருடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்களினால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.