Header image alt text

முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவுநாள் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

image_13முல்லைத்தீவு மாவட்டத்தில் 2004ம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட உறவுகளில் ஒரு தொகுதியினரின் உடல்கள் புதைக்கப்பட்ட ஆறாம்கட்டை கயட்டைப் பகுதியில் நேற்று ஆழிப்பேரலை நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது. சுனாமியில் மரணித்தோரது உறவினர்களுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாந்தி சிறீஸ்கந்தராஜா, அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. அன்ரனி ஜெகநாதன், திரு. கந்தையா சிவநேசன் (பவன்), திரு. துரைராசா ரவிகரன், வன்னி மேம்பாட்டுக்கழக தலைவர் திரு. தவராஜா மாஸ்டர், பங்குத் தந்தை, அருட் சகோதர்கள், அருட் சகோதரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், அலுவலர்கள், ஆகியோரும் பொதுமக்களும் கலந்துகொண்டு நினைவுச் சுடர்களை ஏற்றி மலர்துவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். Read more

செங்கலடி கால்வாய்களை புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை-வியாழேந்திரன் எம்.பி-(படங்கள் இணைப்பு)

dfgggமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் நேற்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள வீதிகளையும், கால்வாய்களையும் பார்வையிட்டதுடன் அங்குள்ள ஒழுங்கற்ற வீதிகள், கால்வாய்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அத்தோடு இப்பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வினை விரைவில் பெற்றுத் தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். Read more

பேரவையின் தீர்வுத் திட்டங்களை ஆராய உபகுழு நியமனம்-(படங்கள் இணைப்பு)

peravaiதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உபகுழு நியமிக்கப்பட்டுள்ளதாக பேரவையின் இணைத்தலைவர் வைத்தியக் கலாநிதி பி. லக்ஸ்மன் தெரிவித்;துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது அமர்வு இன்று யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. இதன் முடிவில் இடமபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த மக்கள் பேரவையானது அடுத்த கட்டதை நோக்கி செல்லவேண்டி உள்ளது. அதனடிப்படையில் தீர்வுத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு உப குழு ஒன்று நியமிக்கபட்டுள்ளது. இக்கழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐந்து அங்கத்தவர்களை கொண்ட வெளிநாட்டு நிபுணர் குழு இணைக்கப்படவுள்ளது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சபையில் முன்வைக்கப்பட்டு சபையால் ஏற்றுக்கொள்ளபட்ட பின்னர் மக்களிடம் வெளிப்படுத்தப்படும்.
Read more

சுன்னாகம் கிணற்றுநீர் தொடர்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்-

chunnakamயாழ். சுன்னாகம் பகுதி கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பால் பாதிப்படைந்த குடிநீரை குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களே பதில் கூறுங்கள் எனக்கோரி யாழ்.சுன்னாகம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று நடத்தினர். சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புகளின் ஒழுங்கமைப்பில் குறித்த கவனயீர்ப்பு சுன்னாகம் முனியப்பர் கோவில் முன்றலில் இடம்பெற்றது. வடமாகாண நீர்வழங்கல் அமைச்சு நிபுணர்குழு ஒன்றை உருவாக்கி குறித்த நிபுணர்கள் குழு இறுதி அறிக்கையினை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையில் சுன்னாகம் நீரில் அச்சுறுத்தும் வகையிலான பார உலோகங்கள் இல்லை எனவும், குடாநாட்டு நீரில் மலக்கிருமிகளின் தாக்கம் உள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த அறிக்கை தமக்கு சாதகமாக உருவாக்கபட்டுள்ளது எனவும் சுன்னாகம் குடிதண்ணீரை குடிக்கலாமா? குடிக்க கூடாதா? என்பதை மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் கூறவேண்டும் என வலியுறுத்தி இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிண்ணியாவில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு-

kinniyaதிருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு அருகில் தலையில் காயங்களுடன் கரையொதுங்கிய சடலமொன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆலங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 05 பிள்ளைகளின் தந்தையான ஏகாம்பரம் அன்புச்செல்வன் (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிண்ணியா, கொட்டியாரக்குடா ஆற்றில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (25) தனது நண்பர்கள் இருவருடன் சென்ற இவர், ஆற்றில் வலையை வீசி விட்டுச் சென்றுள்ளார். பின்னர், அவ்வலையில் மீன்கள் அகப்பட்டுள்ளதா எனப் பார்வையிடச் சென்றபோது, இவர் காணாமல் போயுள்ளார். பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் இவரைத் தேடும் நடவடிக்கை சனிக்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இவரது சடலம் கரையொதுங்கியதாகவும், ஏனைய இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மகிந்தவின் புதிய கூட்டணி-

mahinda (4)மகிந்த ராஜபக்ச சார்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “அபே ஸ்ரீலங்கா பெரமுண“ அல்லது “அவ ஸ்ரீலங்கா ப்ரொன்ட்“ (எமது இலங்கை முன்னணி) என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பிவிதுறு ஹெல உறுமய மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து புதிய முன்னணியை உருவாக்குதற்கு தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் மஹிந்த சார்பு அணியினர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதோடு, இதற்கு பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போராட்டம் காரணமாகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. எனினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பிளவின் விளிம்பில் இருப்பதாகவும், அதில் அங்கம் வகிக்கும் 15பேர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரவையின் ஊடாக நல்லிணக்கம் பெற வாய்ப்புண்டு-வடமாகாண முதலமைச்சர்-

cv vதமிழ் மக்கள் பேரவையின் ஊடாக சேர்ந்து அனைவரும் கைகோர்க்கும் போது புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற வாய்ப்புகள் இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தழிழ் மக்களுடைய கரிசனைகள் பல இருக்கின்றது. வருங்காலத்தில் தழிழ் மக்களுடைய காலம் எவ்வாறு அமைய வேண்டும். எமது பாரம்பரியத்தில் பண்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றது. அதற்கு அமைவாக அரசியல் யாப்பு அமைப்பு தொடர்பிலும் எங்களுக்கு கரிசனை இருக்கின்றது. வருங்கால மக்களுக்கு இவ்வாறான அமைப்பு இல்லை யெனின் அவர்களுக்கான உத்தரவாதம் எவ்வாறு அளிப்பது என்பது இன்றைய நிலைமை. அதனால் இப்பேரவை உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தழிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து வெளியீடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தழிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் எமது கட்சியின் ஊடாக இது தொடர்பாக தெரியப்படுத்தலாம். பல எதிர்ப்புகளை தாண்டுவது தான் ஐனநாயகம். எங்களுடைய மாறான கருத்துக்களை மற்றவர்கள் அறிந்து கொண்டுள்ளார்கள் என்பதில் அவர்களை எதிரிகளாக நினைப்பது தவறு.
Read more