தம்பசிட்டி சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக பரிசளிப்பும், கலைநிகழ்வும்-(படங்கள் இணைப்பு)
யாழ். தம்பசிட்டி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் 109ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வினை முன்னிட்டு தம்பசிட்டி தசாவதானி கதிரவேற்பிள்ளை சனசமூக நிலைய சதாவதானி அரங்கில் பரிசளிப்பு விழாவும் கலைவிழாவும் கடந்த 21.04.2016 திரு. கஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. நடராஜன், கலாநிதி சர்வானந்தன், ரி.ராமேஸ்வரன் (செயலாளர், நகராட்சி மன்றம்) ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இதன்போது பரீட்சைகளில் விசேட சித்திபெற்ற பிள்ளைகளுக்கான பரிசளிப்பும் பிள்ளைகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதில் பெருமளவிலான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.