வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள், தையல் இயந்திரம் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)
நேற்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமைக் காரியாலத்தில் வைத்து பாடசாலை மாணவர்கள் நான்கு பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் தையல் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் தமது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி புரியும் முகமாக துவிச்சக்கர வண்டிகள் மற்றும் தையல் இயந்திரம் என்பவற்றை தந்துதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வட்டு இந்துக் கல்லூரி வட்டு மத்திய கல்லூரி வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை மற்றும் மூளாய் சுப்பிரமணிய வித்தியசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கான மேற்படி உதவிகள் வட்டு இந்து வாலிபர் சங்க தலைமைக் காரியாலத்தில் வைத்து 24.04.2016 அன்று சங்கத்தின் தலைவரது தலைமையில் வழங்கப்பட்டது.
மேலும் வட்டு இந்துக் கல்லூரி விசேட கல்வி பயில்வோரின் அலகிற்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதற்கான நிதி அன்பளிப்புக்களை வட்டுக்கோட்டையச் சேர்ந்த வள்ளிபுரம் (36500ரூபா) மானிப்பாயைச் சேர்ந்த நாகமணி இராஜேஸ்வரி (10000ரூபா) மற்றும் புலம்பெயர் உறவுகளான இந்தியாவைச் சேர்ந்த அழகர் ஈஸ்வரன் (10000ரூபா) அமெரிக்காவைச் சேர்ந்த சி.சிவநாதன் (10000ரூபா) ஆகியோரால் வழங்கப்பட்டிருந்தது. எமது மாணவச் செல்வங்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக உதவிய உறவுகளுக்கு எமது சங்கத்தின் சார்பிலும் மாணவர்கள் மற்றும் பாடசாலைகளின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)
மாணவர்கள் விபரம்
செ.பிரசயானினி வேம்படி மகளீர் உயர்தர பாடசாலை தரம் 6
செ.கஐனிகா வட்டு மத்திய கல்லூரி தரம் 9
யெ.யெசின் மூளாய் சுப்பிரமணிய வித்தியசாலை தரம் 5
ப.மதனிகா வட்டு இந்துக் கல்லூரி தரம் 6