Posted by plotenewseditor on 12 May 2017
Posted in செய்திகள்
இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, நேற்றுமாலை வருகை தந்த, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை 6மணியளவில் கட்டுநாயக்கவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததோடு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுடன், இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய துணை உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
Read more