Header image alt text

அரசியல் அந்தஸ்து கோரிய இலங்கையர் ஒருவரை நாடு கடத்திய விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட இலங்கையர் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படும் போது, அவரது பாதுகாப்பு குறித்து உரிய ஆய்வு செய்யப்பட்டதா என்பது குறித்து அந்த உயர்ஸ்தானிகராலயம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக, அவர் அவுஸ்திரேலிய மண்ணில் இருந்து வெளியேற்றப்படக்கூடாது என தெரிவித்திருந்ததுடன், பாதுகாப்பு குறித்து விண்ணப்பிக்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அகதிகளுக்கான தூதுவராலயம் கோரியிருந்தது. Read more

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இன்றைய தினத்திற்கு பின்னர் எந்தவொரு காரணத்திற்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை எற்பதில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான நபர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் அதிகாரியிடம் இன்றைய தினத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. Read more

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளன. இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் போட்டியிடுவதாக, அண்ணளவாகக் கணிக்கப்பட்டுள்ளது.

நேற்றுடன் நிறைவடைந்த வேட்புமனுக்களில் எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள், இரண்டு கட்டங்களாக ஏற்கப்பட்டன. முதல் கட்டத்தில் 93 உள்ளூராட்சி மன்றங்களுக்காகவும் இரண்டாவது கட்டத்தில் 248 மன்றங்களுக்காகவும், வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. Read more

பிரித்தானிய தமிழர் தகவல் நடுவத்தின் ஏற்பாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை முன்வைத்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட சந்திப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் அண்மையில் கார்த்தீபன் யோக மனோகரன் தலைமையில் தங்கவேல் வாகீசன், விஜயராசா பிரதீப், செல்வக்குமரன் சிவானந்தம், திலக் அன்ரூஸ் ஆகியோர் மிச்சம் மற்றும் மோர்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஷியோபன் மக்டொனாளை சந்தித்துள்ளனர். Read more

மனித உரிமைகள் தொடர்பான உறுதிக்கூறல்கள் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை, கோரிக்கை விடுத்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தாமதம் காரணமாக உண்மை மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளது. Read more

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்கு இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி மாலியில் நிலைகொண்டுள்ள ஐக்கிய நாடுகளின், அமைதிப்படையில் இலங்கை படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் உலகின் ஏனைய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் படையினரை காட்டமுடியும் என்றும் இரர்ணுவ தளபதி தெரிவித்துள்ளார். Read more

வவுனியா, மருக்காரம்பளை, கணேசபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

24 வயதுடைய சிவகுமார் கஜந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்தவராவார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் திடீரென தன் தந்தையை அழைத்து தான் விஷம் அருந்தியுள்ளதாக கூறியதையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read more

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் கௌரவிப்பும் 17.12.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3மணியளவில் கிளிநொச்சி விவேகானந்தநகர் கிழக்கு, கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் விவேகானந்தநகர் கிழக்கு, கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. கறுப்பையா ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், விசேட விருந்தினராக வட மாகாண மீன்பிடி, கமநல, விவசாய அமைச்சர் கௌரவ கந்தையா சிவநேசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

வவுனியா சமளங்குளம் கிராமத்தில் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் இளைஞர்களால் கிராமிய செயலகம் திறப்பு விழா அண்மையில் கழகத்தின் தலைவர் திரு கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின்கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. Read more

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆட்பதிவு திணைக்களத்தினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதிருக்கின்றமை தெரியவந்துள்ளது. பிறப்புக்குறிப்பு மற்றும் வதிவிடத்தை உறுதிசெய்யும் ஆவணம் இல்லாத காரணத்தினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவ்வாறானவர்களுக்கு உடன் அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1000 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.