Header image alt text

வவுனியாவில் சர்வதேச மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இலங்கை மனித உரிமை குழுவின் வவுனியா, மன்னார் பிராந்திய பொறுப்பதிகாரி வசந்தகுமார் தலைமையில் இன்று இடம்பெற்றது.

வவுனியா வெளிவட்ட வீதியில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இந்த நிகழ்வுஇடம்பெற்றது. பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டனர். Read more

கிளிநொச்சி ஏ.9 வீதியின் ஆனையிறவு தட்டுவன்கொட்டி பகுதியில் நேற்றிரவு 7மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து தட்டுவன்கொட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் ஒன்றும் விபத்துக்குள்ளாகின. Read more

நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்னிருத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார். Read more

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் இதனை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மாவட்ட செயலக மட்டத்திலும் இவ்வாறான அலுவலகங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார். இதேவேளை 248 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியது. Read more

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளரான ஜகத்.பீ.விஜேவீர இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சபையின் சிரேஷ்ட அதிகாரியான இவர் இதற்கு முன்னர் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளராகவும், குடிவரவு-குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கப் பணியகம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசியப்பிரதமர் நஜீப் ரஸாகிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த மலேசியப் பிரதமரை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இவ்வரவேற்பு இடம்பெற்றது. இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மலேசியப் பிரதமரின் இவ்விஜயம் இடம்பெறுவதுடன், Read more

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தனது பதவி விலகல் கடிதத்தை வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் கடந்த 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக எம்மிடம் கையளித்துள்ளார்.பதவி விலகல் முறைப்படியாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு முறைப்படி இப் பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு பேரவை செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன். Read more

செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகிலுள்ள கால்வாயிலிருந்து இன்றுகாலை சடலமொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாந்துறை திருவள்ளூர் வீதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய சின்னத்துரை விமலநாதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமாலை தனது வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டியில் சென்றிருந்த நபர் வீடு திரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவரின் உடலத்தை யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று உயிரிழந்த குறித்த நபரின் உடலத்தை இதுவரை யாரும் பொறுப்பேற்க வரவில்லையெனத் தெரிவித்து வைத்தியசாலை அதிகாரிகளால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைபாடு செய்யப்பட்டுள்ளது. Read more