மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகள் என்பனவற்றை விடுவிப்பதற்கு, காலவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவற்றை, எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் விடுவிப்பதென, ஜனாதிபதி விசேட செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான, நேற்றைய கூட்டத்திலேயே மேற்கண்டவாறு ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசேட செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில் நேற்று (25)நடைபெற்றது. Read more
பாரதூரமான மனித படுகொலைகளை செய்தவர்களையும் அரசியல் தலைவர்களை கொலை செய்தவர்களையும் எவ்வாறு அரசியல் கைதிகள் என கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதி அமைச்சர் தலதா அதுக்கோரள, எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சலையில் இல்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 8 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
இலங்கையில், ஆறு மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் நிறைவடைந்து, அம்மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளமையானது, பலரதும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதென,
கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரைக் காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கடற்படைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டிணன் கொமாண்டர் சம்பத் தயானந்தவை, எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சன டீ சில்வா, இன்று உத்தரவிட்டார்.
2018ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் இன்று உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கி உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் தற்போது யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை அரசியலமைப்புச் சபை கூடவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள், அக்காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, மாகாண ஆளுநர்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார். 2018ஆம் ஆண்டில், மாகாண சபைகளின் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலகத்தில், நேற்று இடம்பெற்றது.
இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிவுதவியை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கியுள்ளது.