Header image alt text

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கிராம எழுச்சித் திட்டத்தில் தனது விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் 10லட்சம் ரூபாவில் போடப்பட்ட கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ ஞானப்பழனிமுருகன் தேவஸ்தான அயல் வீதியினை இன்றுபிற்பகல் (20.01.2019) சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் இ.கெங்காதரன், அகீபன் மற்றும் கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ ஞானப்பழனிமுருகன் தேவஸ்தான குருக்கள், ஆலய நிர்வாகத்தினர், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (19.01.2019) யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாக அவர்களது முன்மொழிவுகள் பெறப்பட்டு, பெறப்பட்ட முன்மொழிவுகளைக் கொண்டு மானிப்பாய் தொகுதியில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் உத்தேசித்து அந்த Nவைலத்திட்டங்கள் சம்பந்தமாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் மேற்படி கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் தெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், உபதவிசாளர் பரமேஸ்வரலிங்கம், Read more

யாழ். கைதடி குருசாமி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (18.01.2019) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30மணிளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் நா.ஜெயபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் உபதலைவர் மயூரன், இலங்கையர் வாசுதேவன் (ஓய்வுநிலை உதவிச் செயலாளர், திட்டமிடல், சுகாதார அமைச்சு, மத்திய மாகாணம்) செல்வி அ.நிருபராணி (உதவிக் கோட்டக்கல்வி பணிப்பாளர், விஞ்ஞானம், தென்மராட்சி கல்வி வலயம், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

இன்று யாழ் நகரில் வர்த்தகர்களினால் ‘கோபவனி’ ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது. விவசாயிக்கு பல வழிகளிலும் துணையாக விளங்கும் பசுக்களுக்கும் எருதுகளுக்கும் மரியாதையும் நன்றியும் செலுத்துமுகமாக இந்த கோபவனி யாழ் நகரின் மையப்பகுதியான சத்திரச்சந்தி வைரவர் ஆலயத்தில் ஆரம்பித்து நகர்வலம்வந்து ஆலயத்தில் முடிவுற்றது. இந் நகர்வலத்தின்போது பசு வதைக்கு எதிரான கோசங்களும் மாட்டிறைச்சி கடைகளுக்கு முற்றான தடைவிதிப்பு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இப் பவனியில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் ஈ.சரவணபவன் அவர்களும் யாழ் மாநகரபிதா இம்மானுவேல் ஆர்னோல்ட், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மறவன்புலவு சச்திதானந்தம் ஐயா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் உட்பட வர்த்தகர்களும் பொதுமக்களும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளும் கலந்துகொண்டிருந்தனர். Read more

இணுவில் அறிவாலயத்தின் 14வது ஆண்டுவிழா நிகழ்வு இன்று இடம்பெற்றபோது அறிவாலயத்தின் நூல்நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பகுதியானது செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் மண்டபம் என நாமமிடப்பட்டுள்ளது. இப்பகுதி நூல்நிலையமாக மாற்றப்படுவதற்கான நிதி உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் தங்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக வழங்கியிருந்தமை இந் நிகழ்வின்போது சுட்டிக்காட்டப்பட்டது. அறிவாலயத்தின் தற்போதைய தலைவர் எஸ்.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், பேராசிரியர் தேவராஜா உட்பட கிராமத்தின் கல்விமான்கள், பெரியோர் என பலர் கலந்துகொண்டிருந்தனர். Read more

குரும்பசிட்டி கிராமத்தில் வாழும் மக்களினதும் குரும்பசிட்டியிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரதிநிதிகளினதும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று தைப்பொங்கல் தினத்தில்(15-01-2019) குரும்பசிட்டியிலுள்ள ஆ.சி. நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றபோது புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தனும் கலந்துகொண்டார்.

புலம்பெயர்ந்து வாழும் குரும்பசிட்டி மக்களின் தாராள நிதியுதவியுடனும் தற்போது குரும்பசிட்டியில் வாழும் மக்களின் உழைப்புடனும் குரும்பசிட்டி கிராமம் மீண்டும் மிடுக்குடன் தலைநிமிர்வதாக பெருமிதம் கொண்ட கிராம மக்கள் மேலும் கல்வி, உட்கட்டுமானம் என்பவற்றின் அபிவிருத்திக்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தியபோது, Read more

யாழ்ப்பாணம் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா நிகழ்வுகள் தைப்பொங்கல் தினமான இன்று (15.01.2019) இளவாலையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான பொம்மலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என்பவற்றோடு சறுக்குமரமேறுதல், கயிறிழுத்தல் மற்றும் சிறுவர்கள்கள், பெண்களுக்கான கிராமிய விளையாட்டுக்கள் பலவும் இடம்பெற்றிருந்தன. மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். Read more

(எஸ்.நிதர்ஷன்)
 
சமகால அரசியல் நிலைமைகள் அதிலும் அரசமைப்பு உருவாக்க பணிகள் தொடர்பில் யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள இல்லத்தில் (04.01.2019) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
 
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அங்கு அவர் தெரிவித்தவை வருமாறு, அரசியல் தீர்வு சம்பந்தமாக 2015 ஆம் ஆண்டு தொடக்கம் செயற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றன.

Read more

வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்மைப்புத் திட்டத்தில், முதல் கட்டமாக, 4,750 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிகப்படவுள்ளதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், இந்த வீடுகள் 550 சதுரஅடி பரப்பளவில் அமையவுள்ளதாகவும் இவற்றுக்கான கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வேலைகளின் அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

பூஜை வழிபாடுகளில் ஈடுபட கோவிலுக்கு வந்த இளைஞர்கள்மீது, வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில், இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.

தைப்பொங்கல் தினமான இன்றைய தினம் நாச்சிமார் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில், கோவிலுக்கு அருகில் சில இளைஞர்கள் கூடி நின்றபோது, அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாள் வெட்டுக்குழுவினர், இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது. Read more