Header image alt text

வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் புளியங்குளம் பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி புளியங்குளம், புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பொலிசார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். Read more

யாழ். பருத்தித்துறை – கற்கோவளத்தில் இளைஞர் ஒருவரை அடித்துப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இருவரை பருத்தித்துறை பொலிஸார், நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.

வடமராட்சி, பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் அமல்கரன் (வயது 22) எனும் இளைஞன் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார். சடலமாக மீட்கப்பட்ட நபர் வீட்டிற்கு சற்று தொலைவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், Read more

வவனியாவில் சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தைப்பொங்கலை முன்னிட்டு, இன்று கவனயீர்ப்பு ஊர்வலத்தை முன்னெடுத்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

வவனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கிருந்து கடை வீதி வழியாக ஊர்வலத்தை ஆரம்பித்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தளத்தை அடைந்தனர். பின்னர், அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கு வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், Read more

வவுனியா இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று பகல் 6 மாணவர்கள் குறித்த குளத்தில் நீராடச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குளத்தில் இருந்த கல் ஒன்றின் மீது ஏறியபோது வழுக்கி விழுந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 14 இற்கும் 15 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒரு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரதேசவாசிகள் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் ´உத்தரதேவி´ என்ற பெயருடன் இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது.

கொழும்பில் இருந்து நேற்றுக் காலை 7.15 மணி அளவில் தனது இரண்டாவது பரீட்சார்த்த பயணத்தை ஆரம்பித்த உத்தரதேவி பிற்பகல் 2.30மணியளவில் யாழ். காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது. இந்த பரீட்சார்த்தப் பயணத்தில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், புகையிரத நிலைய அதிகாரிகள், இந்திய அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் எனப் பலரும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைதுசெய்ய சென்றபோது பொலிஸார்மீது மணல் கடத்தல்காரர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (14-01-2019) 7 மணியளவில் தென்மராட்சி – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கெற்பேலி கிராமத்தில் வழமை போன்று நேற்று மாலை கொடிகாமம் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் உழவியந்திரத்தில் மணல் கடத்தி சென்றுள்ளனர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை பிலிபைன்ஸ் நோக்கி பயணமானார்.

4 நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டே அவர் இவ்வாறு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொலிஸ்மா அதிபர் பூசித் ஜயசுந்தர, இன்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். குரல் பதிவொன்றை பெற்றுக் கொள்வற்காக பொலிஸ் மாஅதிபர், அழைக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்துள்ளார்.

பிரமுகர் கொலை சதித்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக, குரல் பதிவை பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதற்கமையவே பொலிஸ்மா அதிபர் இன்று அழைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார். Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)ஆரம்பகால உறுப்பினராக இருந்து வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட சரசாலையைச் சேர்ந்த தோழர் ஜெயமுகுந்தனின் சகோதரியின் நிலைமையைக் கருத்திற்கொண்டு, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த புளொட் உறுப்பினர் செல்வபாலனின் (லெனின்) நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக பசுமாடு ஒன்று இன்று (13.01.2019) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தார்கள்.
Read more

துயர் பகிர்கின்றோம்!

Posted by plotenewseditor on 13 January 2019
Posted in செய்திகள் 

வைத்தியக்கலாநிதி இராஜதுரை தர்மராஜா அவர்கள் நேற்று (12.01.2019) காலை கொழும்பில் காலமானர் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். 

அன்னார் பொதுவுடமைவாதியும், காந்தீயம் அமைப்பின் செயலரும், ஆசிரியரும், கழகத்தின் மூத்த தளபதியும், கழகத்தின் திருமலை மாவட்ட அமைப்பாளருமான அமரர் தோழர் ஜெயச்சந்திரன் (பார்த்தன்) அவர்களின் சகோதரராவார். அவர்தம் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் இன்றுகாலை 10மணிமுதல் கொழும்பு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை மாலை 4மணிக்கு இடம்பெற்று தகனக் கிரியைகளுக்காக கல்கிசை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. தொடர்புகட்கு (மகன் முரளி 0710694930).