ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 2015 ஜனவரி 8ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குமாறு ஜனாதிபதியை முன்னாள் ஜனாதிபதி அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச்சேரும் சிறிசேனவின் முடிவை தான் ஆதரிக்கவில்லை எனவும் சந்திரிகா தெரிவித்துள்ளார். Read more
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் வொஷிங்டன் பயணமானார்.
கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் ஒன்பது பாரவூர்திகளில் நிவாரண பனர்கள் கட்டியவாறு கொண்டுசெல்லப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் புதிய இராணுவ பிரதானி சவேந்திர சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து தீவிர சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
அனுமதி மறுக்கப்பட்ட தரம் 6 மாணவனுக்கு, கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் தரம் ஆறுக்கு தனது மகனை கிளிநொச்சியில் உள்ள இரண்டு பாடசாலைகளிலும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்து, தந்தையொருவர் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்திருந்தார்.
இலங்கை ராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கபட்டமைக்கு இலங்கையின் வடக்கு கிழக்கினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
வெள்ளத்தினால் சேதமடைந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகளை அமைக்கும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது.
மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மீது நேற்று வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
விசேட பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ.இராதாகிருஷ்ணன் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.