Header image alt text

மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அதன்படி ஊவா மாகாண ஆளுனராக ரஜித் கீர்த்தி தென்னகோனும் சப்ரகமுவ மாகாண ஆளுனராக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வடக்கு மாகாண ஆளுனராக டொக்டர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். Read more

யாழ். வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சபேசன் அவர்களது கோரிக்கைக்கு அமைவாக புளொட் தலைவைரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் 2018ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் சபேசன் அவர்களின் வட்டாரத்தில் அமைந்திருக்கும் மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்திற்கு 45000/-பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரமும், மல்லாகம் வீரபத்திரர் ஆலயத்திற்கு 65000/-பெறுமதியான ஒலிபெருக்கி சாதனமும் (06.01.2019) வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் 2019ஆம் ஆண்டுக்கான பசுமைப் புரட்சி திட்டத்தின்கீழ இரு வருடங்களில் பயன்தரக்கூடிய 200 மாங்கன்றுகள் முதல்கட்டமாக இன்றையதினம் மல்லாகம் நீலியம்பனைப் பிள்ளையார் ஆலய முன்றலில் வைத்து அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு (05.01.2019) சனிக்கிழமை மாலை 4.30க்கு புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், கட்சியின் மூத்த உறுப்பினர் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகறாஜ், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன் மற்றும் உள்ளூட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

இன்று மேலும் 4 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனப்படையில் சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய கடந்த வாரம் அனைத்து ஆளுனர்களும் பதவி விலகி இருந்தனர். அதனடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை மேல், மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். எனவே இன்றைய தினம் மீதமாக உள்ள ஏனைய 4 மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். Read more

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்தார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் உறுப்பினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ளமையையும் எடுத்துக்காட்டினார். Read more

வெளிநாட்டு வர்த்தகர் சிலர் இலங்கைக்கு வருகைத் தந்த தனியாருக்குச் சொந்தமான விமானமொன்று உரிய முறையிலன்று நாட்டை விட்டுச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாக போக்குவரத்து சிவில் விமானசேவைகள் அமைச்சுத் தெரிவிக்கின்றது.

கடந்த 3ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த குறித்த விமானத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர், சீனாவைச் சேர்ந்த 3 வர்த்தகர்கள் என ஐவர் வந்திறங்கியதுடன், பின்னர் இவர்கள் குறித்த விமானத்திலேயே திருகோணமலையிலுள்ள சீன துறைமுகத்தின் இராணுவ முகாம் விமானப் பாதையில் தரையிறங்கியுள்ளனர். Read more

வவுனியா, புதூர் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் சந்தேகத்தில் நபரொருவரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2ஆம் திகதி புளியங்குளம், புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பொலிஸார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது அவ்வீதியில் சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த மர்மப் பொதியை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார். Read more

சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டிலுள்ள தீவொன்றுக்குள் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த ஏழு மீனவர்களை அங்கிருந்து நாடு கடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டுக்குரிய ரீ யூனியன் என்ற தீவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற குறித்த மீனவர்கள் ஏழு பேரும் கடந்த வாரம் அந்நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். நீர்கொழும்பு பிரதேசத்திலிருந்து டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி’ ஒஸத புத்தா’ என்ற மீனவப் படகு மூலம் குறித்த மீனவர்கள் பிரான்ஸ் நோக்கிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

இனங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டும் வகையில் அரசமைப்பு ஒன்றை கொண்டு வருவதன் ஊடாக நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பலவந்தமாக புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கும் வாய்ப்பில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளத்தில் மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் கொங்கிறீட் கட்டையுடன் மோதி விபத்துக்குள்ளானரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். ஆரையம்பதியைச் சேர்ந்த இளம் கும்பஸ்தரான இராசதுரை ஜீவநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Read more