ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் வவுனியா மாவட்ட பொதுமக்கள் இணைப்பு அலுவலகம் இன்று (28.01.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் நினைவில்லத்துக்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் உபதலைவர்களான வி.ராகவன், ஜி.ரி.லிங்கநாதன் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், சிரேஸ்ட உறுப்பினர்கள், நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். Read more
யாழ். தென்மராட்சி பகுதிகளில் சாவகச்சேரி பிரதேச சபை உபதலைவர் செ.மயூரன் மற்றும் முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்,
உலகளாவிய ரீதியில் உயிர் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளார்.
சீனாவின் வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் அனைவரையும் தியதலாவ இராணுவ முகாமில் வைத்து கண்கானிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இன்று காலை 6 மணி முதல் பயணிகளைத் தவிர ஏனையவர்கள் யாரும் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.