காலத்தை வென்ற கழக கண்மணிகள்!
தோழர் ஏகாம்பரம் பார்த்தீபன் (பிரதீபன்)
34ஆவது நினைவு தினம்
பிறப்பு : 12.08.1966. விதைப்பு : 30.06.1986

பிரதீபன் என்ற கழக பெயரை கொண்டிருந்த தோழர் பார்த்தீபன் இறக்கும் பொழுது 20 வயது மட்டுமே உடையவராக இருந்தார். ஒடுக்குமுறைகளை கண்டு குமுறும் புரட்சியாளர்களின் உள்ளம் தனது உயிரை துச்சமென மதித்து இறப்பதற்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கும் என்பார்கள். இவரும் அதுபோலவே மகிழ்ச்சியுடன் பால் முகமுடைய குறும்புகார இளைஞராகவே இருந்தார்.

அவரின் நடவடிக்கைகள் சில குழப்படிதனங்களாக இருந்தாலும் அவை ரசிக்ககூடிய குறும்புதனங்களாகவே இருந்துள்ளன. இவர் முதலில் கழகத்தில் இணைய வந்தபொழுது மிகவும் இளையவராக இருந்தமையினால் மறுக்கப்ப்ட்டு இருந்தார். பண்டதரிப்பு பனிப்புலம் கிராமத்தினை பிறப்பிடமாக கொடிருந்த தோழர் பார்த்தீபன் திருகொணமலைக்கு இடம்பெயர்ந்து அங்கு வாழ்ந்து வந்தார். எமது மக்களின் விடுதலைக்காக போராடுவதற்காக கழகத்தில் தன்னை இணைத்து கொண்ட இவர், தமிழகத்தின் தேனி முகாமில் ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
பயிற்சிகளின் பின்பாக தாயகம் திரும்பிய தோழர் பார்த்தீபன் கழகத்தின் தளப்பொறுப்பாளராக இருந்த மெண்டிஸ் அவர்களுக்கு பாதுகாவலாராக செயற்பட்டு வந்ததோடு ஏனைய கழக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார். 1996 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆம் திகதி தோழர் மென்டிஸ் அவர்களின் கட்டளைக்கு இணங்க படையினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்காக வெடிபொருட்களை ஏற்றிற்கொண்டு இவரும் மேலும் சிலர் தோழர்களும் சென்று கொண்டு இருந்தார்கள்.
கோப்பாய் பாலத்திற்கு அருகே வீதியில் வாகனம் ஒன்று விபத்திற்கு உள்ளாகி இருந்தமையினால், ஏனைய வாகனங்கள் பயணிக்கமுடியாத வகையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்தவேளையில் ரோந்து நடவடிக்கையில் இருந்த அரச வான்படையிரின் உலங்குவானூர்தி (Helicopter) ஒன்று வான்பரப்பில் சுற்றியவாறு இவர்களின் வாகனத்தினை நோட்டம் விட்டிருந்தனர்.
இவர்களின் வாகனத்தில் இருந்தவர்கள் இளைஞர்களாக தென்பட்டமையினாலும், வாகனத்தின் பிற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பொருட்கள் முடிவைக்கப்பட்டு இருந்தமையினாலும் படையினர் தாழப்பறந்து (Flown low) இவர்களின் வாகனத்தினை நோக்கி கலிபர் 50 (calibre 50Gun) ரக கனகரக துப்பாக்கினால் தாக்குதலை நடத்த ஆரம்பித்து இருந்தனர். தோழர் பார்த்தீபன் அவருடன் சென்ற ஏனைய மூன்று தோழர்களும் வாகனத்தில் இருந்து குதித்து பாலத்தின் மறுபக்கத்திற்கு சென்று பாதுகாப்பு தேடியிருந்தனர்.
இவர்களின் வாகனத்தில் வெடிபொருட்கள் இருந்தமையினால், படையினரின் தாக்குதலில் வாகனம் வெடித்து சிதறியது. இதனையடுத்து வாகனத்தில் வந்தவர்கள் இயக்க இளைஞர்களே என்பதை படையினர் உறுதி செய்ததோடு, மறுபக்கம் சுற்றிவந்து சுடத் தொடங்கியிருந்தனர். இதன்பொழுது ஒரு பாடசாலை மாணவர் சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டார்.
அங்கிருந்த ஏனைய மக்களை பாதுகாக்கும் நோக்கோடு தன்னிடம் இருந்த எ. கெ. 47 ரக துப்பாக்கியோடு வெளியே வந்த தோழர் பார்த்தீபன் படையினரின் உலங்கு வானூர்தியை இலக்கு வைத்து சுட ஆரம்பித்து இருந்தார். வான்படையினரின் கலிபர் ரக ஆயுதம் கனரக ஆயுதமாகவும், சுடுதூரம் அதிகமாகவும் இருந்தமையினால் தோழர் பார்தீபனின் உடல் பாகங்கள் அதிக காயங்களுக்கு உள்ளாகி அவர் நிலைகுலைந்தார். அந்த 20 வயதுடைய அந்த இளைஞரின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது.
அவரின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மூன்று மைல் தூரம் அளவிற்கு மக்களின் அணிவகுப்பு காணப்பட்டது. மக்கள் மாயனம் வரை சென்று தமது அஞ்சலியை தோழர் பாத்தீபனுக்கு செலுத்தி இருந்தார்கள். கழகதோழர்கள் வானைநோக்கி சுட்டு , அவருக்கு இராணுவமரியாதை செலுத்தியிந்தார்கள்.
தோழர் பார்த்தீபன் படையினருக்கு எதிராக தாக்குதலை நடத்திய துப்பாக்கியின் மகசீனில்(Magazine) தோட்டாக்கள் அனைத்தும் சுடப்பட்டு இருந்தன. மக்களை காப்பாற்றுவதற்காக தோழர் பார்த்தீபன் இறுதிவரை போராடி தனது உயிரை எமக்காக வித்திட்டு சென்றார்.
எமது மண்ணும் மக்களும் வாழும் வரை பார்த்தீபன் பாசத்தோடு நேசிக்கப்படுவார்.
செ. குணபாலன்.
01.யூலை.2020.