(எம். நியூட்டன்)
தமிழ் மக்களின் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிடாது. உரிமைக்காக தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருக்கும். மக்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளை முறையாகச் செய்ய வேண்டும் என கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். சுன்னாகத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், Read more
பண்ணாகம் மக்களுடன் சந்திப்பு…
கிளிநொச்சி மாவட்டத்தின் கிளாலி, பளை வேம்பொடுகேணி மற்றும் அரசர்கேணி பகுதிகளில் மக்களுடனான கலந்துரையாடல்கள்
நாட்டில் மேலும் 22 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது.
வவுனியா புளியங்குளம் சன்னாசிப்பரந்தன் பகுதியில் மாட்டுடன் மோதிய கார் கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவிலுருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கார் வீதியின் எதிரே சென்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியது. விபத்தில் குறித்த கார் கடுமையான சேதமடைந்த நிலையில் அதன் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளார்.
கனரக வாகன விபத்து ஒன்றில் பாடசாலை மாணவன் ஒருவன் சிக்கி நேற்று மரணமாகியுள்ளார். அவரது சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குளம் ஒன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு குறித்த மாணவன் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பிரதமருடனான கலந்துரையாடலில் தமது கோரிக்கைக்கான தீர்வு கிட்டியதால் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடுவதாக துறைமுக தொழிற்சங்கம் நேற்று அறிவித்தது. கார்ல்டன் இல்லத்தில் பிரதமருடன் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்தார்.