1. வவுனியா கோவிற்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இன்று மதியம் சிறுமி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இன்று மதியம் இல்லத்தின் மலசல கூடத்தில் தூங்கில் தொங்கிய நிலையில் 16 வயதுடைய ராஜசெல்லராணி என்ற குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2. வெள்ளவத்தை டபுள்யூ.ஏ சில்வா மாவத்தை பகுதியில் உள்ள கடைத் தொகுதி ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் கடும் வாகன நெரிசல் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

3. நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,074 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 1,885 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

4. யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் ஒன்றை பழுது பாh்த்துக் கொண்டிருந்த போது டிப்பரின் சுமை பெட்டி விழுந்ததில் அதன் சாரதி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மானிப்பாயை சேர்ந்த லிகிந்தன் என்பவரே என தெரியவருகிறது.

5. யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் நடந்த மோதல் சம்பவத்தில், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். செல்வநாயகம் ஜெயசிறி என்பவரே இன்று காலை உயிரிழந்துள்ளார்.

6. நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இரண்டாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திறக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் தரம் 05, 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. தரம் 5 முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன், தரம் 13 மாணவர்களுக்காக காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.