Header image alt text

வேட்பாளர் முருகேபிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் வாகரையில் மக்கள் சந்திப்புகள்…… Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 31வது வீரமக்கள் தினம் இன்று ஆரம்பமானது. வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று 13/07/2020 காலை 09.30 மணியளவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. Read more

விழிநீர் அஞ்சலி!

Posted by plotenewseditor on 13 July 2020
Posted in செய்திகள் 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உறுப்பினரான பாலம்பிட்டியைச் சேர்ந்த தோழர் மயிலன் அவர்களின் துணைவியார் திருமதி. கௌரிநாயகி அவர்கள் இன்று (13.07.2020) திங்கட்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுடன் எங்களின் ஆழ்ந்த துயரையும் பகிர்ந்து கொள்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

தொடர்புக்கு: கொன்சால்-774403664

மன்னாரில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் அலுவலகத்தில் இன்று 31ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் நடைபெற்றன. இன்றுகாலை 10. 15மணியளவில் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் இரா.அந்தோனிப்பிள்ளை (கொன்சால்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் து.சுந்தர்ராஜ், கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது நினைவுச்சுடர் ஏற்றல் இடம்பெற்று மௌனஅஞ்சலி மற்றும் மலரஞ்சலி இடம்பெற்றன. Read more

வலிகாமம்-மேற்கு பிரதேசசபை வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அமரர்  அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுருவச்சிலையின் முன்பாக  அவரது 31வது நினைவுதினமான இன்று (13/07/2020) காலை மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரையும் ஆற்றப்பட்டது. Read more

வவுனியா திருநாவற்குளத்தில் அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது புதல்வன் தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் நேற்றையதினம் சமூக நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. Read more

வேட்பாளர் முருகேபிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் மட்டக்களப்பில் மக்கள் சந்திப்புகள்…… Read more

நவாலி மற்றும் புன்னாலைக்கட்டுவன் கிராமங்களில் இடம்பெற்ற தொடர் பிரச்சார கூட்டங்கள்… Read more

இணுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டங்களில் சில.. Read more

திருநெல்வேலியில் சந்திப்பு… Read more