வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள 1,051 இலங்கையர்கள், காலி மாவட்டத்திலுள்ள கொக்கல மற்றும் கொஸ்கொட ஆகிய பிரதேசங்களிலுள்ள ஹோட்டல்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்களென, காலி மாவட்ட தொற்று நோய் வைத்திய நிபுணர், வைத்தியர் வெனுர கே. சிங்க தெரிவித்துள்ளார். மாலைத்தீவு, இந்தியா, டுபாய், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களே, இராணுவத்தினரின் மேற்பார்வையின் கீழ், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாலைதீவிலிருந்து 491 பேரும், இந்தியாவிலிருந்து 163 பேரும், டுபாயிலிருந்து 142பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 255 பேரும் ஹோட்டல்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.