இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், குழு கெப்டன் சீன் அன்வின் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும் மற்றும் கொவிட் – 19 எதிர்பாரா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்தில் நேற்று (27) சந்தித்தார். Read more
யாழ். மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நிலஅளவைத் திணைக்களத்தினால் இன்று காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 462 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2988 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்ட, ஹொங்கொங்கைச் சேர்ந்த 30 வயது ஆணொருவருக்கு நான்கு மாதங்களின் பிறகு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விளாத்திக்குளம் பகுதியில் காட்டிற்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மருதானை பிரதேசத்தில் நேற்றுமாலை புகையிரதத்தில் மோதுண்டு பொகவந்தலாவ, சீனாகலை தோட்ட இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.