பிரித்தானியாவிலிருந்து நாட்டிற்கு கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை கொண்டு வந்த தனியார் நிறுவனத்திடம் 1,694 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்ட ஈடு கோரி இலங்கையினால் Basel சாசனத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.Basel சாசனம் மீறப்பட்டு கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த நிறுவனத்தினால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.