மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் காயமடைந்த 113 பேர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அவர்களில் 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை PCR பரிசோதனைகளினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த கைதிகளில் 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதுடன் 04 கைதிகளின் நிலைமை மோசமாகவுள்ளதாகவும் ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் 08 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று வத்தளை நீதவான் முன்னிலையில் நடத்தப்படவுள்ளன.