இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 33,475ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 329 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்புதிதாகத் தொற்றுக்குள்ளானோரில் 325 பேர், பேலியகொட மீன் சந்தைக் கொத்தணியுடன் நெருங்கிய தொடர்பாளர்கள் என்பதுடன், மிகுதி நான்கு பேரும் சிறைச்சாலைக் கொத்தணிக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், மினுவாங்கொட – பேலியகொட கொத்தணியில் 29,835 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

சுகாதாரமைச்சின் தரவுப்படி 24,309 பேர் குணமடைந்துள்ளனர்.