
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்திய குழு உறுப்பினரும், கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளரும், கட்சியின் பிரதேச சபை உறுப்பினருமான திரு. சுப்பையா ஜெகதீஸ்வரன்(சிவம்) அவர்கள் வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி விக்னேஸ்வரா வீதியைச் சேர்ந்த திரு. நல்லதம்பி ரட்ணநாதன் (தோழர் ரத்தி) அவர்கள் 17-12-2020 காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 266 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டள்ளனர். இதற்கமைய, கொவிட் இரண்டாவது அலையின் பின்னர் மேல் மாகாணத்தில் பதிவாகிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,123 ஆக அதிகரித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் இன்று(17) முதற்தடவையாக கூடவுள்ளனர். அடுத்த வருடத்துக்கான வாக்காளர் இடாப்பு தயாரித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் 19 தொற்றுக்குள்ளான 616 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணபட்டுள்ளனர். மேற்படி தொள்ளாளர்களிடையே கொழும்பு, களுத்துறை, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அனேகமானோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கான இலங்கையின் புதிய தூதராக நியமிக்கப்பட்ட பாலித கோஹன தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கடந்த 15ஆம் திகதி சீனாவை சென்றடைந்த அவர் நேற்று(16) கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் முகவரி, அடையாள அட்டை எண் உட்பட பெயர் விவரங்களை, பஸ் நடத்துநர்கள் புத்தகங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. ஒரு பஸ்ஸில் பயணித்த பயணியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவருடன் பயணித்த மற்யை பயணிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த இது உதவியாக இருக்கும் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளையும் நாளை (18) முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.l
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நபீர்வத்த பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த தனிமைப்படுத்தல் அமுலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.