 முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயார் ஒருவர் குறித்த உடற்பாகங்கள் இருப்பதை அவதானித்து குறித்த பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்
இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலர் குறித்த உடல் பாகங்கள் இருப்பதை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்
பொலிஸார் குறித்த இடத்தில் வருகைதந்து உடல் பாகங்களை பார்வையிட்டதோடு சிவிலுடையில் குறித்த இடத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர்.