Header image alt text

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனை தொடர்ந்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக முதலமைச்சராக ஸ்டாலினை பதவியேற்க அழைப்பு விடுத்தார். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

யாழ். மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாளுவதற்காக அமைக்கப்பட்ட சீருடை அணிந்த காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேரும் வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்துக்கு (4ஆம் மாடிக்கு) எதிர்வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு சமுகமளிக்குமாறு மேற்படி ஐவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகரை தூய்மையான நகரமாகப் பேணுவதற்காக மாநகரசபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக பிரத்தியேக சீருடை அணிந்து கடந்த மாதம் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.

எனினும் உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்தது என சர்ச்சை எழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்…. Read more

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக பதவியேற்ற தோழர் தர்மலிங்கம் யோகராஜா(யோகன்) அவர்கள் பதவியேற்றதன் பின்னர் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் அஞ்சலியுடன் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் வே.குகதாசன்(குகன்), வவுனியா நகர சபை உறுப்பினர் சு.காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் நந்தகுமார் மற்றும் கட்சியின் மாவட்ட அலுவலகப் பொறுப்பாளர் தோழர் ஓசை உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்திய குழு உறுப்பினரும், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் யோகராஜா (யோகன்) அவர்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தவிசாளராக இதுவரையிலும் கடமையாற்றிய ரெலோ அமைப்பின் துரைசாமி நடராஜசிங்கம்(ரவி) அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ அமைப்புகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டிருந்த தேர்தல் கால உடன்படிக்கைக்கமைவாக, தனது தவிசாளர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.

இதையடுத்து இன்று (05.05.2021) முற்பகல் 10.00 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற புதிய தவிசாளர் தெரிவிற்கான கூட்டத்தில் திரு. தர்மலிங்கம் யோகராஜா (யோகன்) அவர்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சபையில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 5 May 2021
Posted in செய்திகள் 

தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த தமிழ் உணர்வாளரும், தமிழ்மண் பதிப்பக உரிமையாளருமான கோ. இளவழகன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயரடைகின்றோம்.

தமிழ் மக்களின் விடுதலை மீதும், விடுதலைப் போராட்டத்தின் மீதும் மிகுந்த ஆர்வங்கொண்ட இளவழகன் அவர்கள், 1983களில் தமிழக அரசியல்வாதியும், மறைந்த தமிழக முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருமான எஸ்.டி. சோமசுந்தரம் அவர்களினூடாக கழகத்திற்கு அறிமுகமாகி 1987 வரை கழகத்திற்கு பல்வேறு வகையிலும் ஆதரவளித்து வந்தார். ஒரத்தநாட்டிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கழகத்திற்கான பல பயிற்சி முகாம்களை அமைப்பதற்கான ஒழுங்குகளையும், பல்வேறு உதவிகளையும் நல்கியிருந்தார் என்பதை துயர்மிகு இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கின்றோம். Read more

05.05.1999இல் வவுனியாவில் மரணித்த பளை பிரதேச சபையின்  முன்னாள் உறுப்பினர் தோழர் குணம் (வீரகத்தி குணரத்தினம் – திருநாவற்குளம்) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

புளொட் அமைப்பின் சின்னத்துடன் People’s Liberation Organisation of Tamil Eelam – PLOTE எனும் பெயரில் இயங்கும் முகப்புத்தக பக்கம் புளொட் அமைப்பின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கம் அல்ல என்பதை அறியத் தருகிறோம்.
மேற்படி முகப்புத்தக பக்கத்தில் வெளிவரும் பதிவுகளுக்கும் புளொட் அமைப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதையும் உத்தியோகபூர்வமாக அறியத் தருகிறோம்.
மேலும், புளொட் அமைப்பின் சின்னத்துடனும் பெயருடனும் வெளிவரும் மேற்படி பக்கத்தை நிறுத்துவதற்கான அனைத்து வழியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
எமது உரிமைப் போராட்டத்திற்கு உரிய அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு தி.மு.க ஆட்சி தொடர்ந்தும் ஆதரவினை வழங்க வேண்டும்- புளொட்டின் சர்வதேச ஊடகப் பேச்சாளர் செ.ஜெகநாதன் அவர்கள் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து-
மதிப்பிற்கு உரிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு மு.க, ஸ்டாலின் அவர்களுக்கு,
உங்கள் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று நீங்கள் முதல்வராக பதவியேற்க இருப்பதனையிட்டு நாம் மகிழ்ச்சி அடைவதோடு எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

Read more

இம்முறை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் 64.39 சதவீதமான மாணவர்கள் பல்கலைகழகங்களிற்கு தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பரீட்சை மீள் பரீசிலனைக்காக விண்ணப்பங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகின்றது. இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதனடிப்படையில் அவர்களுள் 194,297 மாணவர்கள் பல்கலைகழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் இவ்வாண்டு அமுல்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் மாதம் சாதாரண தர பரீட்சையையும், டிசம்பரில் உயர்தர பரீட்சையும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும் இந்த மாற்றம் 2022 ஆண்டு அல்லது 2023 ஆம் ஆண்டே அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். Read more