பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்கள் புறப்படுவதற்கு முன்னர் பிசிஆர் அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more
மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளரான இலட்சுமனன் தேவபிரதீபன் எனும் ஊடகவியலாளர் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான அவர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சுமார் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்கள் 30 நாட்களுக்கான விசாவைப் பெற்றே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கிலான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குவித்தது. போரை தவிர்க்க ரஷ்யாவிடம் ஐ.நா. அமைப்பு வேண்டுகோள் வைத்தது.
உக்ரைனின் எல்லைகளுக்கு அருகே பல மாதங்களாக படைகளைக் குவித்திருந்த ரஷ்யா வியாழக்கிழமை உக்ரைன் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு திங்கட்கிழமை (28) முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் (03) உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைன் மீது ரஷியப் படைகள் உக்கிரமான தாக்குதலை 3ஆவது நாளாக நடத்தி வருகின்றது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனைத் தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷியப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
25.02.1985இல் மரணித்த தோழர் சிவாஜிகணேசன் (மகாலிங்கம்- புதுக்குடியிருப்பு) அவர்களின் 37ஆம் ஆண்டுநினைவு நாள் இன்று….
உக்ரேன் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் இராணுவ தாக்குதலுக்கு உள்ளானது. இந்தநிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய இகைப்பற்றியதாக, உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் உள்ள அசமந்தப்போக்கு தமது விசனத்திற்கு காரணமாக அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் (Michelle Bachelet) குறிப்பிட்டுள்ளார்.