பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மூன்று ஆலயங்கள் மற்றும் பாடசாலைக்கு நிதி மற்றும் கணினி உட்பட்ட உதவித்திட்டங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.
26.12.2005இல் இறம்பைக்குளத்தில் மரணித்த தோழர் சர்ச்சில் (திருப்பதி மாஸ்டர்- வீரப்பன் திருப்பதி- சமயபுரம்) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
ஆழிப் பேரலையால் சொந்தங்கள் காவுகொள்ளப்பட்ட கருப்பு நாள். சுனாமி என்னும் பெயர் தாங்கிய கொடிய அலைகள் உறவுகளின் உயிர், உடைமைகளை எம் கண் முன்னே பலியெடுத்த கொடிய நாள். அந்த துன்பகரமான நிகழ்வு நடைபெற்று 18 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
27.12.1987இல் முருங்கனில் மரணித்த தோழர்கள் குலம் (ரவீந்திரராஜா – முள்ளிவாய்க்கால்), அலெக்ஸ் (வடலியடைப்பு), வேந்தன்- அளவக்கை), சோக்கிரட்டீஸ் – அளவக்கை), தீசன் (பேனாட் – பள்ளிமுனை), ரெலா றோஜன் (விடத்தல்தீவு) ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
சுனாமி ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 18 ம் ஆண்டு நினைவு நாள் இலங்கையில் முதலாவதாக நிறுவப்பெற்ற பூந்தோட்டம் சுனாமி நினைவு தூபியில் இன்று இடம்பெற்றபோது, மரணித்த அத்தனை உறவுகளின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது.
கயட்டை முள்ளியவளையில் இன்று மாலை 05.05 மணியளவில் ஆழிப் பேரவையில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து நினைவுச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 18ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது.
சிம்பாப்வேவுக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த தூதுவராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மினோலி பெரேராவை அவுஸ்திரேலிய அரசாங்கம் நியமித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுடன் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கான்பெராவில் நடத்திய ஊடக சந்திப்பின்போது, அவர் இதனைத் தெரிவித்தார். கொங்கோ, மலாவி மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளுக்கும் மினோலி பெரேரா அவுஸ்திரேலியாவின் தூதராக பணியாற்றவுள்ளார்.
இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை இல்லை என ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது. பிரஜைகளுக்கு வாழ்வதற்கு காணப்படும் உரிமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளமையை கருத்தில்கொண்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.