நேற்றைய தினம் கழகத்தின் முன்னாள் மூத்த உறுப்பினரும் நெடுங்கேணி குளவிசுட்டான் அ.த,க பாடசாலையின் ஓய்வுநிலை அதிபருமாகிய திரு சி.ராஜரட்ணம் அவர்களின் மணிவிழா மற்றும் மணிவிழா மலர் வெளியீடும் பாடசாலை மண்டபத்தில் அதிபர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது . நிகழ்வில் கட்சியினுடைய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிமனையின் உயரதிகாரிகள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இலங்கையில் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வனப் பாதுகாப்புத்துறைகளை பயங்கரவாத அமைப்புகளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் பைடனுக்கான தமிழர் என்ற அமைப்பு, கோரியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு, அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கனுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. வனப்பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் தமிழ் பிரதேசங்களில் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் மேற்பார்வையில் நில அபகரிப்பு மற்றும் இனச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
2021(2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை 2022 டிசம்பர் 30 வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாட்டை அண்மித்துள்ளது. இதன் காரணமாக இன்று(24) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை வேளையில் இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணியகத்தின் பணிப்பாளர் இந்திரிக்க ரத்வத்தை தலைமையிலான பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்று ஆலைகளில் ஒன்று இன்று (23) முதல் மூடப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த நிலக்கரி ஆலை, தற்போதுள்ள நிலக்கரி இருப்புகளை நிர்வகிக்கவும், வழக்கமான பராமரிப்புக்காகவும், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, சர்வதேச வர்த்தகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களால் தனித்தனியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளில் காணப்படும் குறைபாடுகளைத் தவிர்ப்பதன் மூலமும், அதன் செயற்பாடுகளை மிகுந்த செயற்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலும் இந்த புதிய அலுவலகம் நிறுவப்படவுள்ளது.
திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இன்று மாலை குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.