புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலி மாரியம்மன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் சோதிராசா அவர்கள் நேற்று (21.12.2022) புதன்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். இவர் கட்சியினுடைய ஜெர்மன் கிளைத் தோழர் சி.தர்மினி அவர்களின் அன்புத் தந்தையும், அமரர் தோழர் கா.சிவகுமாரன் (சுப்பர் – ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு பதிலாக புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்து பரிசீலிக்க பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 60 வயது பூர்த்தியாகும் 25 ஆயிரம் அரச ஊழியர்கள் எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் 25 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான ஊழியர்களை மாத்திரமே அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலீட்டுச் சபையின் தலைவராக தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி துஷ்னி வீரகோன், சாந்தனி விஜேவர்தன, எராஜ் டி சில்வா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்று, கிளிநொச்சி. பளை பகுதியில் இன்று (21) இரவு விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பஸ், மாலை 6 மணியளவில் ஏ9 வீதியின் பளை முள்ளியடி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு புரண்டு விபத்துக்குள்ளாகியது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி எனப்படும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகளை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவுடன், வெலிஓயா பகுதியில் உள்ள நில அளவைத்திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு வந்து, எல்லைக் கற்களை நாட்டியுள்ளார்கள். இதனை மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளதுடன் நாட்டப்பட்ட எல்லைக்கற்களையும் அகற்றவைத்துள்ளார்கள்.
இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர், கேர்ணல் எம்.பி.பி.நளின் ஹேரத் நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தினார். இதனிடையே, இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், அடுத்த ஆண்டில் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் சில மாதங்களுக்கு தேவையான நிலக்கரி தொகையை உடனடியாக நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் பகுதியைச் சேர்ந்த நட்சத்திரா வானம் ஆகிய இரு மகளிர் அமைப்புக்களுக்கு சுழற்சிமுறை கடனுதவியாக ரூபாய் 50,000/= நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
மிருசுவில் பகுதியில், 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல், மிருசுவில் தேவாலயத்துக்கு முன்னால் நேற்று (20) நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரை, மூன்று பிள்ளைகளையும் இராணுவத்தின் படுகொலைக்கு பறிகொடுத்த தாயார் ஏற்றி வைத்தார்.
அனுராதபுரம் – வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அனுராதபுரம் – வவுனியா வீதியில் ரயில் கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.