பாரபட்சமாக செயற்படுவதாக பொலிஸாருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிடைத்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை பாரபட்ச செயற்பாடுகளுடன் தொடர்புடையவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் பொலிஸாருக்கு எதிராக 11,450 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் 9, 774 முறைப்பாடுகள் பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட 1960 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன. Read more
இலங்கையில் பிறந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி கனேடிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பூர்விக குடிகள் உறவுகள் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதன்முதலில் 2015 இல் scarborough rough park இன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னர் கனடாவின் நீதி அமைச்சருக்கும் சட்டமா அதிபருக்கும் நாடாளுமன்றச் செயலாளராகவும் அரச-சுதேச உறவுகள் அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத், ஐக்கிய இலங்கை தௌஹீத் ஜமாத் மற்றும் ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா ஆகிய 5 அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை மேற்குலக நாடுகள் எதிர்ப்பது போன்று இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா கடுமையான எதிர்த்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் பசிபிக் பிராந்தியத்தில் புதிய ஏகாதிபத்தியம் உருவாகி வருவதாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூ கலிடோனியா, பப்புவா நிவ் கினியா, வனுவாட்டு குடியரசு (Vanuatu) ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கடந்த 24ஆம் திகதி முதல் உத்தியோகப்பூர்வ விஜயங்களை மேற்கொண்டார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கருவாதோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
26.07.1990இல் சென்னையில் மரணித்த தோழர் இந்து (முத்துவேலு அழகேஸ்வரன்) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று
26.07.2003இல் மரணித்த தோழர் டெய்லர் (சுப்ராயன் கந்தசாமி – வவுனியா) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தேசிய மக்கள் சக்தி மற்றும் பெப்ஃப்ரல் அமைப்பு என்பன மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
யாழ். அளவெட்டி தெற்கு கலைநகரைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டவரும், புளொட் சுவிஸ் தோழர் மனோ அவர்களின் மூத்த சகோதரருமான திரு. மார்க்கண்டு கந்தசாமி (மகேந்திரம்) அவர்கள் நேற்று (25.07.2023) செவ்வாய்க்கிழமை அளவெட்டியில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.