பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதேச செயலாளர் ஒருவருக்கு 15,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். Read more
குயின் மேரி என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. தாய்லாந்தின் புகட் நகரிலிருந்து குறித்த சொகுசு ரக கப்பல் வந்துள்ளது. அதில் 2,290 சுற்றுலாப் பயணிகளும் 1,218 பணியாளர்களும் வருகை தந்துள்ளனர். பிரித்தானியா, சுவிட்ஸர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கச்சத்தீவு விடயத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலையினால் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு அமைய, பெறப்பட்ட தகவல்களை மேற்கோள்காட்டி நரேந்திர மோடி தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இதன்படி, 1974ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட நிர்வாக்க் கூட்டம் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மத்தியகுழு உறுப்பினர் தோழர் க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தின்போது மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகள் பற்றியும், எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ராவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் குறித்த சந்திப்பில் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை இந்தியாவுடன் இணைந்து பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குயின் விக்டோரியா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த குறித்த கப்பலில் 1,812 சுற்றுலா பயணிகளும் 964 பணிக்குழாமினரும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே குறித்த கப்பலில் இலங்கையை வந்தடைந்துள்ளனர். அவர்கள் இன்றைய தினம் காலி கண்டி மற்றும் பின்னவல ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்று (30) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில் குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்காது. சர்வதேச நீதியினைக்கோரி நாம் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.
ஶ்ரீ துர்க்கா முன்பள்ளிச் சிறார்களின் சிறுவர் வர்த்தக சந்தை நிகழ்வில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன் (பா.உ), கட்சியின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கெங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கொழும்பு – இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. 5.3 கிலோமீட்டர் நீளமான இந்த அதிவேக வீதி நான்கு ஒழுங்கைகளைக் கொண்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த அதிவேக வீதியின் 80 வீதமான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களது வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி, பரிசுகள் வழங்கப்படுவதாக அறிவித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இணைப்புகளுக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை அவசர கணினி குற்றத்தடுப்பு பிரிவு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதன் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு முன்னர் அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்துமாறு அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.