யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன்இ நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்ததால் பதற்றநிலை ஏற்பட்டது. Read more
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக பிரதேச மக்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக பொதுமக்கள் பல்வேறு பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத ஓய்வூதிய சம்பளக் கொடுப்பனவும் எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, சம்பளப் பிரச்சினையை முன்வைத்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளரும், சிரேஷ்ட போராளியுமான *தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்)* அவர்களின் நினைவாக, உணர்வுப் பகிர்வுக் கூட்டம் 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 7 மணிவரை லண்டன் Harrow West Conservative Association
தோழர் RR அவர்களின் ஞாபகார்த்தமாக இன்று (25.03.2024) செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்திற்கு முன்பு சிரமதானப் பணி இடம்பெற்றது.
மட்டக்களப்பு வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள கதிரியக்க சிகிச்சை பிரிவுகளில் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்பவியலாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் நாடு முழுவதும் உள்ள கதிரியக்க சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் அரச கதிரியக்க தொழிநுட்பவியலாளர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஈ.தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னாலுள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பது தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களுக்கு கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார்? நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களை தாம் இரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரென அவர் தெரிவித்திருந்தார்.
தெல்லிப்பளை இந்து இளைஞர் மன்றத்தினால் புதிதாக புனரமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிட திறப்புவிழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன், புளொட் தலைவர் த. சித்தார்த்தன்(பா.உ), தெல்லிப்பளை இளைஞர் சேவை மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சிரேஸ்ட உபதலைவர் வேலாயுதம் நல்லநாதரின் (ஆர்ஆர்) நினைவு நிகழ்வில் நேற்றையதினம் (23.03.2024) கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.