Header image alt text

வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையத்தில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்துரையாடல்-

யாழ்.பருத்தித்துறை வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையத்தில் சனசமூக நிலைய தலைவர் ரட்ணவடிவேல் உள்ளிட்ட சனசமூக நிலைய அங்கத்தவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டுக் கழகத்தினரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் இன்றுபகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கலைமணி சனசமூக நிலைய தலைவர் ரட்ணவடிவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலின்போது பிரதேச மக்களின் குறைநிறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தந்து வாக்களித்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களும் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் நனறியினைத் தெரிவித்துக் கொண்டார்கள். Read more

அல்வாய் வடமத்தி பிரதேச நிலைமைகள் தொடர்பில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மக்களுடன் கலந்துரையாடல்-

1 (2)யாழ்ப்பாணம் அல்வாய் வடமத்தி குமுதெனி சனசமூக நிலையத்தில் சனசமூக நிலைய தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டுக் கழகத்தினர் ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் இன்றுமுற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். Read more

காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வலியுறுத்தியும் வவுனியாவில் இம்மாதம் மாபெரும் தீப்பந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு.

SAM_9835 SAM_9836காணாமல் போனோர் தொடர்பில் அரசை பொறுக்கூற வைப்பதற்கும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதற்கும் ஜனநாயக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைமை கட்டடத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

குடாநாட்டில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு தூபமிடப்படுகிறது-தர்மலிங்கம் சித்தார்த்தன்-

Sithar ploteஉயர் பாதுகாப்பு வலயங்களாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை குடாநாட்டின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்த தூபமிடப்படுகின்றது.

இதனை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் வலி வடக்கில் காங்கேசன்துறை தொகுதி முழுவதும் உள்ளடங்கலாக இளவாலை வரையில், சுற்றியுள்ள நிலப்பரப்பினை இராணுவம் தமக்குள் வைத்துள்ளது, Read more

நியூசிலாந்து, அவுஸ்திரேலிய எம்.பிக்கள் விடுதலை-

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், விசா சட்டத்தை மீறி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லொஜ்ஜி மற்றும் அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் செனற்றர் லீ ரிகியோனன் ஆகிய இருவருமே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் நாட்டைவிட்டு வெளியேற இணங்கியமையை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குடியகல்வு, குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளைச் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்திருந்தனர். 

பொதுநலவாய இளைஞர் மாநாடு ஆரம்பம்-

பொதுநலவாய இளைஞர் மாநாடு இன்று முற்பகல் அம்பாந்தோட்டை, மாகம் ரு{ஹணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. ஒன்பதாவது தடவையாக நடைபெறவுள்ள பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் 44 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 200 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். அபிவிருத்திக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இளைஞர் மாநாடு நடைபெறுகின்றது.

யுனெஸ்கோ உப தலைவராக கருணாரத்ன தெரிவு-

யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் உப தலைவராக இலங்கை பிரதிநிதி பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிரான்ஸில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 37ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரின்போது அவர் உப தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இக்கூட்டத் தொடரின்போது பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த உரையாற்றியுள்ளார்.

பருத்தித்துறைப் பகுதியில் வீடுகள், காணிகள் கையளிப்பு-

யாழ். பருத்தித்துறை பகுதியில் 521 படைத்தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 50வீடுகள் மற்றும் 22காணிகள் இன்று பொதுமக்களின் கையளிக்கப்பட்டுள்ளன. 521ஆவது படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பாதுகாப்பு படைப்பிரிவின் 7ஆவது படைப்பிரிவினால் இன்றுகாலை இந்த கையளிப்பு இடம்பெற்றுள்ளது. 521ஆவது படைப்பிரிவின் கேணல் டி.எம்.ரி.பி டிசாநாயக்க வீடுகள் மற்றும் காணிகள் கையளிப்பதற்கான அத்தாட்சி ஆவணத்தினை பருத்தித்துறை பிரதேச செயலர் ஆர்.ரி.ஜெயசீலனிடம் கையளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்த வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. மேற்படி கையளிக்கப்பட்ட வீடுகளை மக்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். இந்நிகழ்வில், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சக்கோட்டை பகுதி கிராம அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

பொதுநலவாய மாநாட்டிற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்-

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கான நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகின்றன. இதன்படி அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன் பொதுநலவாய நாடுகளின் இளைஞர் மாநாடு மற்றும் பொது மாநாடு என்பன நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளன. இந்த முறை பொதுநலவாய நாடுகளின் இளைஞர் மாநாடு ஹம்பாந்தொட்டையில் நடைபெறவுள்ளது. பொதுமாநாடு ஹிக்கடுவையில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் மற்றும் அரச தலைவர்கள் இன்றுமுதல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

மாவிலாற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு-

மாவிலாறு பிரதேச காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி ஆயுதப்பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்துள்ளனர். ரி.56 ரக துப்பாக்கி 01, எம்.ரி.எம்.ஜி. ரக துப்பாக்கி-01, எல்.எம்.ஜி. ரவைகள் 400. ர்p.56 ரக துப்பாக்கி ரவைகள். 2000. சீ4 வெடிமருந்து 15 கிலோ. ர்p.என்.ரி.வெடிமருந்து 20கிலோ மற்றும் வயர் உள்ளிட்டவையே மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வாகரை படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து வாகரை 233ஆவது படைப்பிரிவு படையினரும், புலனாய்வினரும் இணைந்து இவற்றை மீட்டதாக வாகரை பொலிசார் கூறியுள்ளனர்.

மன்னர் காசியப்பரின் மண்பானை-

மாத்தளை மாவட்டம் தம்புள்ளை, சீகிரியா நுழைவாயிலின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, மன்னர் காசிப்பர் காலத்துக்கு உரியது என நம்பப்படும் மண் பானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்சியின் போது இது மீட்கப்பட்டுள்ளது. இந்த பானை மண்ணால் நிரப்பப்பட்டுள்ளது. இதன் நிறை 20 கிலோ என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை மேலதிக ஆய்வு உட்படுத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கம்பறையில் மௌனப் பிரார்த்தனை-

யாழ். வலி. மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வலக்கம்பறை அம்மன் ஆலயத்தில் மௌனப் பிரார்த்தனை ஒன்று நேற்றுபகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை நடைபெற்றது. வலி. மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரனின் தலைமையில் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது. இதன்போது மீளக் குடியமர்ந்தவர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுதல், எமது பண்பாட்டு அம்சமான ஆலயங்களை அழிப்பதை நிறுத்துதல், பரவலாக இடம்பெற்றுவரும் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், காணாமல் போனோர் தொடர்பில் விரைவாக திருப்தி அளிக்கக்கூடிய தீர்வை அளித்தல், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாது கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற 6 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் வலி.மேற்கு பிரதேசசபை தவிசாளரினால் கையளிக்கப்பட்டது.. இதன்போது குருமார்கள், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், பிரதேசசபை உறுப்பினர்கள், தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.

கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்திற்கு மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் விஜயம்-

யாழ். கோப்பாயில் அமைந்துள்ள கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேற்றுமுற்பகல் விஜயம் செய்திருந்தார். அவர் தனது விஜயத்தின்போது சரவணபவானந்த வித்தியாலயத்தின் அதிபர் திரு. ஆனந்தராஜா அவர்களையும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் சந்தித்து உரையாடினார். இதன்போது அங்குள்ள குறைநிறைகளையும், மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் கேட்டறிந்து கொண்டார்.

கூட்டமைப்பு பிரமுகர் மு.தம்பிராசாவின் பாத யாத்திரை ஒத்திவைப்பு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா அவர்கள் இன்றுகாலை முதல் மேற்கொள்ளவிருந்த பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த பாத யாத்திரை பின்போடப்பட்டுள்ளதாக தம்பிராசா தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் அனைவரையும் பங்கேற்கச் செய்து அதைச் சிறப்பிக்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் கூறியதன்படி இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக மேற்படி பாத யாத்திரையை ஒத்திவைத்ததாகவும் தம்பிராஜா குறிப்பிட்டுள்ளார். Read more

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு-

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை யாழ். ரில்கோ விடுதியில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லொஜ்ஜி மற்றும் அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் செனற்றர் லீ ரிகியோனன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வட மாகாண சபை அமைச்சர் ஜங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன், வலி வடக்கு பிரதேசசபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வட மாகாண நிலைமைகள் மற்றும் வட மாகாணசபையின் செயற்பாடுகள் சம்பந்தமாகவும், வட மாகாணத்தில் மக்கள் அன்றாடம் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்கள். சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லொஜ்ஜி மற்றும் செனற்றர் லீ ரிகியோனன் ஆகியோர் தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்கள்.