ஐ.நா விசேட பிரதிநிதி முல்லைத்தீவுக்கு விஜயம்-
இலங்கை வந்துள்ள உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியும், விசேட அறிக்கையாளருமான சலோகா பெயானி, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்திருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றுகாலை விஜயம் செய்திருந்த பெயானி, அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து முல்லைத்தீவில் இறுதியாக மீள்குடியேற்றப்பட்ட கிராமமான கேப்பாபிலவு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதாக மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். Read more


