Header image alt text

எம்மை நாமே ஆழ்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவேண்டுமென வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்-

cv-wiஎமது மக்கள் நலன்சார்ந்து பலவற்றை நாம் அரசிடம் கேட்கின்றோம். ஆனால் நாம் கேட்பவற்றை வழங்கக் கூடாது என்ற மன நிலையில் பெரும்பானமை சமூகம் இருகின்றது. இந்த எண்ணம் மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் நாம் அரசை நம்பியிருக்கக் கூடாது. எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ளவேண்டும். மத்திய அரசுக்கு அடுத்தபடியாக மாகாணசபையும் அதற்கு அடுத்த நிலையில் பிரதேச சபைகளும் உள்ளன. ஒவ்வொருவரும் அடுத்தவரது எல்லைக்குள் பிரவேசிக்காமல் இருந்தால் தான் சுமுகமான உறவினைக் கட்டியெழுப்பமுடியும். நாங்கள் பெரும்பான்மை இனத்தவரோடு, கட்சியால், மொழியால், கலைகளால் வேறுபட்டவர்கள். அதனால் தான் எமக்கு அதிகாரப்பகிர்வு தேவைப்படுகின்றது. எம்மை நாமே ஆழ்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவேண்டும். அரசு தமது கருத்தைப் பலப்படுத்தி எம்மை வலுவிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. அரசு எமக்கு நேசக்கரம் நீட்டுவது போல நீட்டி எம்மை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடுகிறது என அவர் யாழ் கரவெட்டி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி சபைத் தலைவர் பொ.வியாகேசின் தலைமையில் இடம்பெற்ற வாரவிழாவும் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் 10 மில்லியனுக்கு ஏலத்தில்  இரும்புக்காக மொத்தமாக அள்ளிச் செல்லப்படுகிறது.

1a(546)முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொண்டு செல்லமுடியாமல் கைவிட்டு தப்பியோடிய மக்களினதும், இறந்த மக்களினதும் உரிமைகோரப்படாத, உரிமைகோரப்பட முடியாத நிலையிலிருந்த வாகனங்கள் அனைத்தும் இரும்புக்காக கொண்டு செல்லப்படுகின்றன. ஏற்கனவே தெற்கு வியாபாரிகளால் பகுதி பகுதியாக அபகரிக்கப்பட்டவை இப்போது மொத்தமாக அள்ளிச் செல்லப்படுகிறது.
இறுதியுத்தத்தின் போது கைவிடப்பட்டு எவராலும் உரிமை கோரப்படாது காணப்பட்ட பாவனைக்கு உட்படுத்தப்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால்பத்து மில்லியனுக்கு ஏலத்தில் விற்க்கப்பட்டுள்ளன. Read more

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே உறுதியளித்துள்ளார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே உறுதியளித்துள்ளார் என இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார்.

imagesCAV34F3Gஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தனக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அகாசி குறிப்பிட்டார். அத்துடன் சிறந்த நபரொருவர் வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த மாகாண மக்களிற்காக அரும்பாடுபடுவார் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். Read more

வடக்கு ஆளுநரை அகற்றும் பிரேரணையை நாடாளுமன்றில் கொண்டுவருவோம்: த.தே.கூ .

imagesCA027L42வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிரிக்கும் வட மாகாணசபைக்கும் இடையிலான அரசியலமைப்பு மோதல் நேற்று புதிய திருப்பத்தை கண்டது. வட மாகாண ஆளுநரை அகற்றவும் பூஜித ஜயசுந்தரவை வடக்குக்கு புதிய பொலிஸ் மாஅதிபராக நியமித்ததை எதிர்த்தும் நாடாளுமன்றில் ஒரு பிரேரணையை கொண்டுவரப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடித்துக் கூறியது.
வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

 மாகாண ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்.

imagesCAA6XM3213ஆவது திருத்தச் சட்டத்திற்கமைவாக மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையிலான இந்த கலந்துரையாடல் யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வட மாகாண செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலர்கள்,  பிரதேச சபைகளின் தலைவர்கள், கணக்காளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
ஆளுநருக்கு எத்தகைய அதிகாரங்கள் அரசியலமைப்பின் எந்தெந்த சரத்துக்கள் மற்றும் விதிகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் தமக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு உரிய விளக்கங்களை ஆளுநர் வழங்கினார்.
இராணுவ பின்புலமுள்ள ஆளுநரினை மாற்ற வேண்டுமென்ற பிரேரணை கடந்த 10ஆம் திகதி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமரர் மண்டேலாவிற்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

umc300தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த நெல்சன் மண்டேலாவிற்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
நெல்சன் மண்டேலாவின் உருவப்படம் பல்கலைக்கழக முன்றலிலுள்ள இராமநாதன் சிலையிலிருந்து மாணவர்களினால் ஊர்வலமாக கைலாசபதி கலையரங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள நினைவுத் தூபியில் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இ.இராஜகுமாரன் தலைமையில் நினைவுப் பேருரையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புதிய அரசுத்துறைகளை உருவாக்கும் அதிகாரம் மாகாண அரசுக்கு உண்டு- டாக்டர் கே.விக்னேஸ்வரன்.

131212160252_vigneswaransrilankaformer_secretarynortheast_province_former_advisoreastern_province_281x351_bbc_nocreditஇலங்கையின் மாகாணங்களுக்கு புதிய திணைக்களங்களை (அரசுத் துறைகள்) உருவாக்கும் அதிகாரம் இருக்கிறது. முன்பு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் முதல்வருக்கு செயலராகவும், பின்னர் கிழக்கு மாகாண முதல்வருக்கு ஆலோசகராகவும் பணியாற்றிய டாக்டர் கே.விக்னேஸ்வரன்.
இலங்கையின் வட மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் மாகாண கவுன்சிலில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட உரையில் புதிதாக வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து ஆகிய இரு துறைகளை உருவாக்கப்போவதாக அறிவித்திருந்த்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. Read more

வடமாகாண வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

npc2_CIபாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாகக் கடமையாற்றிய முன்னாள் தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் ஒரேயடியாக 4,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 462 பேர் பயனடைவர். வடக்கைச் சேர்ந்த கலைஞர்கள் 50 பேருக்கு அடுத்த ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் 5,000 ரூபா ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பள்ளி ஆசிரியர்களுக்குக் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த 3,000 ரூபா கொடுப்பனவு நவம்பர் மாதத்திலிருந்து மீண்டும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 1,800 பேர் பயனடைவர். வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதம் நேற்று நடந்தது. கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஒதுக்கீடுகள் விவாதிக்கப்பட்டன. Read more

சாத்வீகப் போர் மீண்டும் வெடிக்கும் சம்பந்தன் குமுறல்: அவசரப்படாமல் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும்- யசூசி அகாசி

sambanthanaasfasfதமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். இதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது. இவ்வாறு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பு வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நேற்றிரவு கொழும்பு – ஹில்டன் ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது. Read more

இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி சுதந்திரமான நாடாக செயற்படுவதையே சர்வதேசம் விரும்புகிறது.-யசூஷி அகாஷி

imagesCAV34F3Gசிறுபான்மையினரின் உரிமைகள், வடக்கு மக்களின் நிலை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி சுதந்திரமான நாடாக செயறபடுவதனையே சர்வதேசம் எதிர்பார்க்கின்றது என இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷி தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் வடக்கு மக்களின் உரிமைகளை வென்றெடுக்க போராடும் நிலை என்பன தமிழ் தேசியக் கூட்டமைப் புடனான கலந்துரையாடலின் போது தெரிகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான விசேட தூதுவர் யசூஷி அகாஷி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று கொழும்பில் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. பல மணி நேர கலந்துரையாடலின் பின்னர் யசூஷி அகாஷி ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிபிடுகையில், Read more