Header image alt text

ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்-

1370629979Untitled-1வெளியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 274773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 36580 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுள்ளன. இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51.25 வீத வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 40.24 வீத வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 05.36 வீத வாக்குகளையும் பெற்றுள்ளன. இதேவேளை சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி இரு மாவட்டங்களிலும் 6076 (0.89) வாக்குகளைப் பெற்றுள்ளது. எனினும் ஆசனங்கள் எதனையும் அக்கட்சியால் பெற முடியவில்லை.

பதுளை மாவட்டத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 209,056 வாக்குகளைப் பெற்று 09 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 197,708 வாக்குகளைப் பெற்று 08 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 20,625 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் வசப்படுத்தியுள்ளன. Read more

கலாநிதி ராஜினி திராணகம அவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு-

rajini diranagama (1)மனித உரிமைகள் மற்றும் பெண் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரான மறைந்த கலாநிதி ராஜினி திராணகம அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ். ரிம்மர் மண்டபத்தில் இன்றுமுற்பகல் ராஜினி திராணகம நினைவு ஏற்பாட்டுக் குழுவினரால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவுதின நிகழ்வில் தென்னிலங்கை உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மூவின மக்களும் பெருமளவில் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். அமரர் ராஜினி திராணகம (ராஜினி rajini diranagama 20.09 (4)ராஜசிங்கம் திராணகம) அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட உடற் கூறியல் விரிவுரையாளராகவும், அப்பிரிவின் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதுடன், உடற் கூறியல் துறையில் இங்கிலாந்தில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர். 90களில் வெளியிடப்பட்ட முறிந்த பனை என்கின்ற ஆங்கில நூலை எழுதியவர்களுள் ஒருவரான இவர், மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினை ஆரம்பித்தவர்களுள் ஒருவராவார். 80களில் rajini diranagama 20.09 (5)தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டு பின்பு ஆயுதப் போராட்ட செயற்பாடுகளில் இருந்த குறைபாடுகள் கண்டு அதிலிருந்து விலகி, மனித உரிமைகள் மற்றும் பெண் விடுதலை தொடர்பிலான செயற்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.  Read more

வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலைய மணிவிழா-

photo (5)யாழ்ப்பாணம் வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் மணிவிழா நிகழ்வுகள் இன்று (19.09.2014) வெள்ளிக்கிழமை தலைவர் திரு சாந்தலிங்கம் சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் நிகழ்வில் சமூகமளிக்க முடியாமற் போனதால் அவரது இடத்திற்கு கழகத்தின் (புளொட்) வன்னிப் பிராந்திய அமைப்பாளரும் மத்தியகுழு உறுப்பினருமான திரு சிவநேசன் (பவன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

(படங்கள் இணைப்பு) Read more

ஆசியன் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

2(3915) 4(2173) 13(504) 16(276)ஆசியன் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்- பொருளில் நடைபெறும் ஆசியான் சர்வதேச அரசியல் கட்சிகளின் மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பமானது. 40 நாடுகளின் 360 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டின் தலைமைப் பதவியை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஏற்றுக்- கொண்டார். இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறு என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜனி திராணகமவின் படுகொலையை வன்மையாக கண்டிப்போம் என சுவரொட்டிகள்

phoster1989ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட மருத்துவரான ராஜனி திராணகமவின் மரணத்துக்கு தமிழீழ விடுதலை புலிகளே காரணம் என குற்றஞ்சாட்டி, யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

 ‘கொடிய எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளினால் 1989 செப்டெம்பர் 21ஆம் திகதி அன்று சுட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவரான ராஜனி திராணகமவின் படுகொலையை வன்மையாக கண்டிப்போம்’ என அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சுவரொட்டிகள், யாழ். மாவட்டதின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

பிரித்தானியாவில் இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் எதிர்ப்பு-

scotlandதனி நாடாவது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் இருந்து பிரிந்து தனி நாடாவது குறித்த பொது வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தில் நேற்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று அதிகாலை முதல் வெளியாகத் துவங்கின. பிரித்தானியாவிலிருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் ஓர் அங்கமாக கடந்த 307 ஆண்டுகளாக நீடித்த ஸ்கொட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு, அந்நாட்டிலேயே உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றின் உண்மையான நிலையறிய அங்கு நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 2,600 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 16வயது நிரம்பியவர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். 86 சதவீத வாக்குகள் பதிவாகின. Read more

யாழில் காணி அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது-

444mathakal_land_002mathakal_land_001யாழ். மாதகல் பிரதேசத்தில் கடற்படை முகாம் அமைக்கும் நோக்குடன், முன்னெடுக்கப்பட்ட காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை, பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு கோணவளை எனும் பகுதியில் து-150 கிராமசேவையாளர் பிரிவில் உள்ள 4 பரப்பு காணியினை கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிப்பதற்கு இன்று காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக இளவாலை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்கள் பொது மக்களுடன் இணைந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நில அளவீட்டு பணியை மேற்கொள்ள விடாது தடுக்கும்வகையில் நில அளவை உபகரணங்களை சுற்றி வளைத்து போராட்டம் நடாத்தினர். இந்த கடும் எதிர்ப்பின் காரணமாக நிலஅளவை திணைக்கள ஊழியர்கள் தமது பணியினை கைவிட்டுச் சென்றனர். இன்று அளவீடு செய்யப்படவிருந்த குறித்த 4 பரப்பு Read more

ஐ.நா ஆணையாளர் ஹூசைன்  – அனந்தி சசிதரன் சந்திப்பு-

aa(46)ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள இளவரசர் செயிட் அல் ஹ_ஸைனை, வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சந்தித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான ஒன்றுகூடலின்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், வட மாகாணசபை உறுப்பினர் துரைராஜா ரவிகரனும் கலந்துகொண்டிருந்தார். நேற்றையதினம் காலை இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய அனந்தி சசிதரன், இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தி உரையாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணசபை நிதி நியதிச்சட்டம் ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டது 

northern-வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதிநியதிச்சட்டம் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் அங்கீகரிக்கப்பட்டு வியாழக்கிழமை (18) தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அதனுடன் ஏற்கெனவே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்த முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டமும் கையளிக்கப்பட்டதாக அவைத்தலைவர் குறிப்பிட்டார். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதிக்கு வியாழக்கிழமை காலை வருகை தந்த வடமாகாண ஆளுரின் செயலாளர் எல்.இளங்கோவன் இவற்றை தங்களிடம் ஒப்படைத்ததாக அவைத்தலைவர் தெரிவித்தார். மேற்படி இரண்டு நியதிச்சட்டங்களும் அங்கீரிக்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பான சட்டத்தை அமுலாக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவைத்தலைவர் மேலும் தெரிவித்தார். வடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டம் மற்றும் முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் ஆகிய உருவாக்கப்பட்டன. உருவாக்கப்பட்ட மூன்று நியதி சட்டங்களும் ஆளுநரின் சிபாரிசு பெறும் பொருட்டு, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு வடமாகாண சபை அனுப்பி வைத்தது. இதில் முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆளுநர் அதனை ஏற்கமறுத்ததுடன், சட்டவல்லுநர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு, தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார். ஜனாதிபதி அதனை பரிசீலனை செய்து உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, நீதிமன்றத்தினூடாக தீர்மானம் எடுக்கப்படும் என கூறினார். அடுத்ததாக முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க வடமாகாண சபையினர் சில மாற்றங்களை செய்தததையடுத்து, அதனை ஆளுநர் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். இருந்தும், நிதி நியதிச்சட்டத்தில் பல சரத்துக்கள் சட்ட எல்லையை மீறியும், மத்திய அரசாங்கத்தினுடைய உரித்துக்களை பற்றி கூறுவதாகவும் இருப்பதாகவும், அதனை நீக்கி திருத்தங்கள் செய்யும் படி ஆலோசனை கூறி ஏற்க மறுத்து, வடமாகாண ஆளுநர் வடமாகாண சபையினருக்கு திருப்பி அனுப்பினார். இவ்வாறு இரண்டு தடவைகள் திருத்தங்கள் மேற்கொண்டு வடமாகாண சபையினர் ஆளுநரிடம் சமர்ப்பித்திருந்த போதும், தான் எதிர்பார்த்த திருத்தங்கள் இடம்பெறவில்லையென ஆளுநர் ஏற்கமறுத்தார். தொடர்ந்து கடந்த 10 ஆம் திகதி திருத்தங்கள் செய்து அனுப்பப்பட்டதை நிதி நியதிச்சட்டத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட நியதிச்சட்டங்களை  வடமாகாண சபையினரிடம் கையளித்துள்ளார்

தமிழர்கள் யாரும் தூங்கிவிடக்கூடாது – மாவை

Untitled2இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராசா தெரிவு செய்யப்பட்டமையை பாராட்டி, காங்கேசன்துறை தமிழரசு கட்சி அலுவலகத்தால் வழங்கப்பட்ட வரவேற்பு கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது கூறினார். தமிழ் மக்களாகிய நாங்கள் யாரும் தூங்கிவிடக்கூடாது. எமது இலக்கை நோக்கி நகர வேண்டியது அவசியமாகும்.’நாங்கள் பாண்டவர்களைப் போன்றவர்கள். எங்களால் வெற்றி பெற முடியும். அறம் பிழைப்போரே கஸ்டங்களை அனுபவிப்பார்கள என்றம்;. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், Read more

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின்  நினைவுதினம் அஷ்டிப்பு  

untitledஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 14வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் துஆப் பிரார்த்தனைகளும் கத்தமுல் குர்ஆன் வைபவங்களும் பாடசாலை மாணவர்களுக்கான பேருரைகளும் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றன. இதனை முன்னிட்டு சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், சவூதி தூதுவராலய பொதுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர் ஏற்பாடு செய்த கத்தமுல் குர்ஆன் வைபவமும், துஆப் பிரார்த்தனையும் சம்மாந்துறையில் இடம்பெற்றது. இதன்போது கல்முனை மாநகர உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவருமான ஏ.எம்.அப்துல் மஜீட் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சம்மாந்துறை தப்லீஹூல் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் ஏ.சீ.ஏ.எம்.புஹாரி (மௌலவி), சம்மாந்துறை உலமா கங்கிரஸ் உறுப்பினர்கள், உலமாக்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த போரளிகள், பொதுமக்கள், புத்திஜீவிகள் என மேலும் பலர் கலந்துகொண்டனர்

வரட்சியால் பாதிக்கப்பட்ட 7,500 குடும்பங்களுக்கு நிவாரணம்  

imagesCAI3FFOVகிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவந்த வரட்சி காரணமாக, 29 ஆயிரத்து 294 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் குடிநீருக்கான தட்டுப்பாட்டை எதிர்கொண்டதுடன், இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் ரீதியாக (விவசாயம், மீன்பிடி) பாதிக்கப்பட்டு வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், இவர்களின் அன்றாட உணவு தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையும் காணப்பட்டது. இதனையடுத்து, வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் பாதிக்கப்பட்ட 7,500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு வரட்சி நிவாரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

விவசாய நிலங்களை விடுவிக்க படைத்தரப்பு இணக்கம் .

imagesCAHWB7BEமுல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோர் வசமிருந்த 642 ஏக்கர் விவசாய நிலங்களை விடுவிப்பதற்கு இராணுவத்தினரும் விமானப்படையினரும் இணக்கம் தெரிவித்து கேப்பாப்பிலவு, வாவெட்டிகுளம், இயன்கன்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள 67 விவசாயிகளுக்கு சொந்தமான 320 ஏக்கர் விவசாய காணியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகள், கடந்த வெள்ளிக்கிழமை (12) இராணுவத்தினரால் அகற்றப்பட்டன. தொடர்ந்து, கமக்கார அமைப்பு, கிராம அபிவிருத்திச் சங்கம், விவசாயிகள் ஆகியோர் இராணுவ உயர் அதிகாரிகளிடம் சென்று, தங்கள் வயல் நிலங்களை அடையாளப்படுத்தினர். இதேவேளை, விமானப்படையின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இயன்கன்குளம் பகுதியிலுள்ள 32 விவசாயிகளுக்கு சொந்தமான 82 ஏக்கர் வயல் நிலமும், வாவெட்டிக்குளம் பகுதியிலுள்ள 34 விவசாயிகளுக்கு சொந்தமான 240 ஏக்கர் வயல் நிலமும் விவசாயிகளிடம் வழங்கப்படவுள்ளன இந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளை, விமானப்படையினரும் இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவும் இணைந்து அகற்றி வருகின்றனர். மேற்படி இரண்டு பிரிவு வயல் நிலங்களும் எதிர்வரும் 25ஆம் திகதி விவசாயிகளிடம் உத்தியோகபூர்வமாக வழங்குவதாக இராணுவத்தினர் உறுதியளித்தனர். விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே இந்த விவசாய நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன. அத்துடன், அப்பகுதியில் நின்றிருந்த கால்நடைகளையும் உரிமையாளர்கள் எடுத்துக்கொள்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளதாகவும். இதனையடுத்து, மேற்படி பகுதிகளில் இம்முறை காலபோக நெற்செய்கையை விவசாயிகள் மேற்கொள்ள தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. என கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்இ.பரமேஸ்வரன் தெரிவித்தார்.