Header image alt text

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்-

zeid_navi_001ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 27ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவினர் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான தகவல்கள் இன்று ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடரில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 26ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை குறித்த முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பான தகவல்கள் இவ்வாறு வெளியிடப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த வருடத்திற்கான இறுதி கூட்டத் தொடராக இன்று ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடர் அமைந்துள்ளதென இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆறு வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக பதவி வகித்து வந்த நவநீதம்பிள்ளை ஓய்வுபெற்றுள்ள நிலையில் புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள ஜோர்தான் இளவரசர் ஷெய்த் அல் {ஹசைன் இன்று ஆரம்பவுரை நிகழ்த்தவுள்ளார். ஆணையாளர்களில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இலங்கை தொடர்பான விசாரணைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் பயங்கரமான சூழல் தொடர்கிறது-ஐ.நா மனித உரிமை ஆணையாளர்-

Navaneethampillaiyin paathaiyilஇலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹூசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் 27ஆவது அமர்வு இன்று ஆரம்பமானபோது தனது ஆரம்ப உரையின்போது மனித உரிமை ஆணையகத்தின் புதிய ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வன்முறையும் அரங்கேறி வருவதைக் கண்டிப்பதாக கூறிய அவர், முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பாதையில் தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். புகலிட கோரிக்கையாளர்களின் உரிமையை அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக மீறிவருவதையும், அடைக்கலம் கோருவோரை கடலில் வைத்து விசாரிப்பதையும் கப்பல்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதையும் கடுமையாக அவர் கண்டித்துள்ளார். எதேச்சாதிகாரமாக தடுத்துவைத்தல் சித்திரவதைக்கு உட்படும் சாத்தியம் ஆகிய மனித உரிமை மீறல்களுக்கு இந்த கொள்கை வழிவகுத்துள்ளது என ஷெயிட் அல் ஹூசேன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி ஆதரவு பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல்-

மொனராகலை – மதுருகெட்டிய பிரதேசத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆதரவாளர்களான பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் இன்றுகாலை 6.30 மணியளவில் இலக்கத் தகடு இல்லாத டிபென்டர் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு அதில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மாணவன் கடுமையாகத் தாக்கப்பட்டு வீதியில் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு இயக்கமான கபே தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி மொனராகலை மாவட்ட வேட்பாளர் பல்லியகுருகே விஜேசிறியின் வீட்டில் குறித்த மாணவர்கள் தங்கியிருந்துள்ளனர். இன்றுகாலை முகம் கழுவவென நால்வரும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றவேளை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவருக்கு கழுத்து, தலை, கை பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் பல்லியகுருகே விஜேசிறியின் வீட்டின்மீது இதற்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டதோடு துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பொதுமக்களின் காணிகள் கையளிப்பு-

mattakalapil pothumakkalin kaanikalமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த நிலைமையின்போது படைமுகாமாக படையினரால் பயன்படுத்தப்பட்டுவந்த பொதுமக்களின் காணிகள் கையளிக்கப்பட்டு வருகின்றன. இதன்கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் படையினரின் முகாமாக இருந்த பொதுமக்களின் காணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் உள்ள 18வது சிங்கபாகு படைப்பிரிவின் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் ஆலோசனையின்பேரில் கிழக்கு மாகாண கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் படையினரின் முகாம் இருந்த பொதுமக்களின் காணிகளின் ஒரு பகுதி இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இருந்த பிரதான படைமுகாம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்டவெல்லாவெளியிலுள்ள படைமுகாம் என்பன அகற்றப்பட்டுள்ளன.

மாணவியைக் காணவில்லையென முறைப்பாடு-

நுவரெலியா தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டக்கொடை -மடக்கும்புர கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். வட்டக்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் சக்திவேல் நித்தியா (வயது 15) எனும் மாணவியே கடந்த 5ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. வெளியே சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பாததையடுத்து மாணவியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டிருந்த போதிலும் அவர் கிடைக்கவில்லை. அதன்பின் காணாமல் போன மாணவியின் தந்தை நேற்று 7ஆம் திகதி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழரசு கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்-

itak_manadu_005ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவே உதவி அளிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 15ஆவது தேசிய மாநாடு நேற்றிரவு வவுனியாவில் முடிவுற்றபோது நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

01. 2014 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 5,6,7 ஆம் திகதிகளில் வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு ஏறத்தாழ அறுபது வருடங்களாக இக்கட்சியின் கொள்கைகளுக்காக அயராது உழைத்தவர்களுக்கும் இதன் அடிப்படைக் கொள்கைகளை ஏற்று, ஆதரித்து, தொடர்ச்சியாக வாக்களித்து, இதுவே தமிழ் மக்களுடைய நிலைப்பாடு என்பதை ஜனநாயக முறைப்படி உறுதி செய்த எமது மக்களுக்கும், எம்முடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும் அதேவேளையிலே அந்தக் கொள்கை – அதாவது, எமது இனத்தின் சுயநிர்ணய அடிப்படையிலே, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளே, இணைந்த வடக்கு – கிழக்கில் பகிரப்படும் இறைமையின் அடிப்படையில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்று வன்முறையற்ற சாத்வீகப் போராட்டத்தின் மூலம் – வென்றெடுக்கப்படும் வரை போராடுவோம் என்று எமது மக்களுக்கு உறுதி கூறுகின்றது. Read more

கியூபா வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

Bகியூபா வெளிவிவகார அமைச்சர் புருனோ ரோதிகேஸ் பரில்லா, இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றுஅதிகாலை 4.45க்கு இலங்கை வந்துள்ளார். அவர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளார். கியூபாவுக்கும் – இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 55 ஆண்டுகள் பூர்த்தியடைவதனை முன்னிட்டு, இடம்பெறவுள்ள நிகழ்விலும், கியூபா வெளிவிவகார அமைச்சர் பங்கேற்கவுள்ளார். இதைத்தவிர, சிறீ ஜயவர்தனபுர கோட்டே இராணுவ நினைவுத்தூபி, பத்தரமுல்லையிலுள்ள எமது கிராமம், கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கும் அவர் செல்லவுள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி கியூபா வெளிவிவகார அமைச்சர், நாடுதிரும்பவுள்ளார். இதேவேளை கியூபா வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 32 வருடங்களின் பின் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்-புதிய ஆணையாளர்-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, ஐ.நாவின் புதிய மனித உரிமைகள் ஆணையாளரும் ஜோர்தான் இளவரசருமான அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். மேலும் அண்மைக்காலமாக இலங்கையில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் புதிய ஆணையாளர் நாயகம் கவலை வெளியிட்டுள்ளார். இதேவேளை நாளையதினம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அவர் இதனைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ.நா சபை மனித உரிமைகள் பேரவையின் 27வது அமர்வுகள் நாளை ஆரம்பமாகி 26ம் திகதிவரை இடம்பெறவுள்ளன.

ஜப்பானின் பிரதமர் இலங்கைக்கு விஜயம்-

1(6988)ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ளார். ஜப்பானின் பிரதமர் ஒருவர் 24 வருடங்களின் பின்னர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், அத்துடன் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்வதற்கும் ஏற்படாகியிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யசூசி அகாசி தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு-

பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் உருவாக்கப்பட்ட வட மாகாண சபை சுயாதீனமாக இயங்க முடியாமல் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியை சந்தித்தபோது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அத்துடன் வடமாகாண சபை இயங்கமுடியாத நிலையில் இருக்கின்றமை மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, காணி அபகரிப்புகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன விபத்தில் பாராளுமன்ற உறுப்பினரான அஜித் மான்னப்பெரும காயம்-

mannaperuma_acci_002தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர், களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப் வாகனம் தெற்கு அதிவேக வீதியின் தொடம்கொட பகுதியில் குடை சாய்ந்ததென தகவல் கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவர் கைது-

kadunayaka_arest_001kadunayaka_arest_002அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்துள்ளனர். போலியான கடவுச்சீட்டுக்கள் ஊடாக பயணித்தமை மற்றும் புலிகள் அமைப்பை மீளவும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தனரா என்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வல்லுவர்புரம், விசுவமடுவைச் சேர்ந்த பாலச்சந்திரன் தவபாலன் அனுஷன் (வயது 20), கடகலந்தகுளம், முருங்கனைச் சேர்ந்த செபஸ்தியன் பிள்ளை ரொபட் (வயது 43) ஆகிய இருவருமே கைதானவர்களாவர். இதில் செபஸ்தியன்பிள்ளை ரொபட் என்பவர் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு 2010ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி பிணை நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டவர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல்

Sஇலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் தோன்றியுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது பேராளர் மாநாட்டின் போது 15 தீர்மானங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் இன்று வாசிக்கப்பட்டன.

இதன்போது, அம்மாநாட்டில் கூடியிருந்த சிலர், தமிழர்களின் அபிலாஷைகளை உள்ளடக்கியதாக தீர்மானங்கள் எழுதப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தீர்மானங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்தியகுழு உறுபபினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் மத்தியகுழு, பொதுச்சபை என்பன கட்சியின் தீர்மானங்கள் தொடர்பான பல்வேறான கருத்துக்களை எடுத்தியம்பியிருந்தோம்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வகையில் அவை அமையவேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், கட்சியின் தலைமைகள் தாம் எழுதிய தீர்மானங்களில் எவ்வித மாற்றமும் இன்றி அவற்றை இன்று வெளியிட்டிருந்தது.

எனவே தான், அதனை நிராகரித்து மாற்றங்களை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் 15ஆவது பேராளர் மாநாடு-

itak_manadu_005இலங்கை தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டின் 3ஆவது நாள் பேராளர் மாநாடு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகளின் விபரங்களாவன, தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, செயலராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த துரைராஜசிங்கம், சிரேஷ்ட துணைத் தலைவர்களாக பொன்.செல்வராஜா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், உப தலைவர்களாக திருமலையைச் சேர்ந்த துரைரட்ணசிங்கம், அம்பாறையைச் சேர்ந்த தோமஸ் வில்லியம், வவுனியாவைச் சேர்ந்த ப.சத்தியலிங்கம், யாழ்ப்பாணத்தை சேர்ந்த எஸ்.பரஞ்சோதி ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலர்களாக எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும், நிர்வாகச் செயலராக சி.குலநாயகமும், பொருளாளர்களாக கனகசபாபதி, அன்ரனி ஜெகநாதன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். ஊடகத்துறை -பா.அரியநேந்திரன், சட்டத்துறை -கே.வி. தவராசா, மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரம் -ஈ.சரவணபவன், இளைஞர் விவகாரம் -சி.சிவகரன், கல்வி மேம்பாடு -சி.தண்டாயுதபாணி, மகளிர் விவகாரம் -அனந்தி சசிதரன், பேராசிரியர் நாச்சியார், மத,பண்பாட்டு விவகாரம் -சீ.யோகேஸ்வரன், விவசாயம் -கமலேஸ்வரன், மீன்பிடித்துறை -ஆனோல்ட், சமூகமேம்பாடு -எஸ்.சிவயோகன், கலையரசன் கொள்கைப் பரப்புகை -எஸ்.வேளமாலிகிதன்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு-

itak_manadu_005itak_manadu_001இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும் செயற்குழு தலைவராக இரா.சம்பந்தனும், செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தெரிவாகியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி பொதுச்சபை கூட்டம் இன்றுகாலை முதல் வவுனியாவில் நடைபெற்று வருகின்றது. வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் பொதுச் சபை கூட்டத்தில் இந்த தெரிவுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு நாளையதினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கியூபா வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு, கியூபா வெளிவிவகார அமைச்சர் புர்னோ ரொட்ரிகியுஸ் பரில்லா நாளை இலங்கை வரவுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் கியூபாவுக்குச் சென்றிருந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இலங்கைக்கு வருமாறு அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி இலங்கை வரும் ரொட்ரிகியுஸ் பரில்லா எதிர்வரும் 9ம் திகதி தமது நாட்டுக்குத் திரும்பவுள்ளார்.

யசூசி அகாசி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க ஏற்பாடு-

இலங்கைக்கு மூன்று நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகாசி இன்று இரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளார். இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் வடமாகாண சபை செயற்படுவதற்கு அரசாங்கம் தடையாவுள்ளமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக உதவியளிக்க வேண்டும் என கோரி மகஜர் ஒன்று கையளிக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2002ஆம் ஆண்டு நேர்வேயின் ஏற்பாட்டில் அரசுக்கும் புலிகளுக்குமிடையே பேச்சுக்கள் ஆரம்பமானபோது அன்றிலிருந்து யசூசி அகாசி ஜப்பானின் இலங்கைக்கான சமாதான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போதைய விஜயமானது இவரது இலங்கைக்கான 24ஆவது விஜயமென்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்புகளுக்கு ஐ.நா பொறுப்பு கூற வேண்டும்-

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களை பாதுகாக்க ஐ.நா சபை தவறிவிட்டதாக மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புதிதாக வெளியான அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி த றொயிட்டர்ஸ் இணையத்தளம் இதனைக் கூறியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஐ.நா சபை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புகளுக்கு ஐ.நா சபையே பொறுப்பு கூறவேண்டும் என்றும் அதில்; கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஏற்கனவே இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா சபை முன்னதாக விசாரணை நடத்தியிருந்தது. இது தொடர்பில் ஜோன் பெற்றி தயாரித்த அறிக்கையில், இலங்கை யுத்தத்தின் போது ஐ.நா சபையின் கட்டமைப்பு முழுமையாக தோல்வி அடைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ஐ.நா சபை தங்களின் கட்டமைப்பை சீரமைத்துக் கொள்வதற்கான மற்றுமொரு அறிக்கையையும் தயாரித்திருந்தது.

ஐ.தே.கட்சியின் 68வது மாநாடு-

ஐக்கிய தேசிய கட்சியின் 68வது வருடாந்த மாநாடு இன்று பசறையில் நடைபெறுகின்றது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் தகவல்படி, ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு சமாந்தரமாக இந்த மாநாட்டை நடத்துவதாக தெரியவருகிறது. இம்மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் நினைவுநாள் மற்றும் நினைவுப் பேருரை-

unnamedகலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் நினைவுநாளும் நினைவுப் பேருரையும் எதிர்வரும் 11.09.2014 வியாழக்கிழமை அன்று காலை 8.45 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.00மணிவரையில் இடம்பெறவுள்ளது. செல்லா மண்டபம், வாழ்வகம், சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்ற முகவரியில் வாழ்வகத்தின் தலைவர் திரு. ஆறுமுகம் ரவீந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொள்கின்றார். சிறப்பு அதிதிகளாக – வலி தெற்கு (உடுவில்) உதவி பிரதேச செயலர் திருமதி யசோதா உதயகுமார் மற்றும் சர்வதேச லயன்ஸ் கழகங்களின் 306(டீ)ஆளுனர் லயன் னுச.வை.தியாகராஜா, யாழ். ஞானம் பவுண்டேசன் திரு கனகசிங்கம் நவநீதன், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி னுச.மகேந்திரன் சுரேந்திரன், வரையறுக்கப்பட்ட வர்த்தக வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு. றோய் நிக்கலஸ், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.எச்.எல்துஸ்யந்த ஆகியோரும், கௌரவ விருந்தினராக – தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வின்போது யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம், முதுநிலை விரிவுரையாளர் திருமதி திலகேஸ்வரி குமுதரஞ்சன் அவர்கள் நினைவுப் பேருரையினை ஆற்றவுள்ளார்.

வடமாகாண சபையை இயங்கவிடாது அரசு முட்டுக்கட்டை போடுவதாக சுட்டிக்காட்டு- 

vada maakaanaவடமாகாண சபையை இயங்கவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன்னிற்கு எடுத்துக்கூறியதாக யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை, ஆளுநர் பதவியிலிருந்து மாற்றாமல் தொடர்ந்து அவரை இரண்டாவது தடவையாக நியமித்து வடமாகாண சபையின் செயற்பாடுகளை செய்யவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக அவருக்கு எடுத்துக்கூறினேன். தமிழ் மக்கள் மத்தியில் திருப்பம் ஒன்று கட்டாயம் வேண்டும். தமிழ் மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற வழிவகைகளை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டேன். வடக்கு மாகாண சபைக்கு இருக்கும் முட்டுக்கட்டைகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரும் தன்னிடம் எடுத்துக் கூறியதாகவும் அன்ரு மன், தன்னிடம் தெரிவித்ததாக ஆயர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி ஞாபகார்த்த தடகளப் போட்டி-

வாழ்வக நிறுவனத்தால் நடத்தப்படும் கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி ஞாபகார்த்த தடகளப் போட்டி – 2014 எதிர்வரும் 07.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்றுகாலை 9.01மணியளவில் யாழ். மருதனார்மடம், இராமநாதன் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. சுன்னாகம் வாழ்வகத்தின் தலைவர் திரு..ஆறுமுகம் ரவீந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருமதி இமெல்டா சுகுமார், (செயலாளர், சமூகசேவைத் திணைக்களம்) அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு ஆறுமுகம் ராஜேந்திரன் (மாகாணக் கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாணம்) வைத்தியக் கலாநதி மு.மலரவன் (கண் சத்திர சிகிச்சை நிபுணர்) யாழ். போதனா வைத்தியசாலை. திருமதி கமலராணி கிருஸ்ணப்பிள்ளை (அதிபர். இராமநாதன் கல்லூரி, யாழ்ப்பாணம்.) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் செய்திகளை வாசிக்க…. Read more

வலிமேற்கில் புதிய கடைத்தொகுதி தவிசாளரால் திறந்துவைப்பு-

vali metkil puthiya kadaithokuthi' (2)vali metkil puthiya kadaithokuthi' (1)vali metkil puthiya kadaithokuthi' (5)யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட சத்தியக்காட்டு சந்தைப்பகுதியின் புதிய கடைத்தொகுதியை கடந்த 29.08.2014 அன்று வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் திறந்து வைத்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் அவர்கள், எதிர்வரும் காலங்களில் மேலும் இச்சந்தைப் பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தவுள்ளதாக கூறினார். இதேவேளை 29.08.2014 அன்று பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து சுழிபுரம் patraikkaadu eriyoottal (1)patraikkaadu eriyoottal (2)நெல்லியன் பகுதியிலுள்ள கிரியோலைச் சந்திப் பகுதியில் விசமிகளால் எரியூட்டப்படட்ட பற்றைக்காட்டுப் பகுதிகள் மற்றும் பனை மரங்களை வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் நேரடியாக பார்;வையிட்டார். இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் அவர், பிரதேச செயலர் மற்றும் வடமாகாண சபை சுற்றுப்புற சூழல் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர்க்கு எழுத்துமூலமாகவும் அறிவித்தார். இது தொடர்பாக தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கூறுகையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுமானால் சுற்றுப்புற சூழல் மட்டுமல்லாது இப்பகுதி மக்களது இயல்பு நிலையும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க விசா விண்ணப்ப முறையில் மாற்றம்-

குடிபெயர்வு சாராத விஸாவுக்கான புதிய இணையத்தள நடைமுறை ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் செப்டம்பர் 7ஆம் திகதிமுதல் செயற்படுத்தவுள்ளது. விண்ணப்பதாரிகளுக்கு மிகவும் இலகுவான, வசதியான நடைமுறைகளுடன் இப்புதிய செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு அமெரிக்க தூதரகங்களில் இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. புதிய நடைமுறை குறித்த மேலதிக தகவல்களுக்காக செப்டெம்பர் 08ஆம் திகதியிலிருந்து திங்கள்முதல் வெள்ளிவரை காலை 8மணிமுதல் இரவு 8 மணிவரை (இலங்கை நேரப்படி) 94-11-7703703 என்ற இலவச தொலைபேசி சேவையுடன் தொடர்பு கொள்ளலாம். இந்த மாற்றங்கள், புதிய திட்டமிடலுக்கான இணைய முகவரி, பொது விசா தகவல்களை தூதரகத்தின் http://srilanka.usembassy.gov என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இணையத்தளம் மற்றும் தொலைபேசி சேவைகள் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க……… Read more

திருநாவற்குளத்தில் பேருந்து தரிப்பு நிலையம் – புளொட் தலைவர் திறந்து வைப்பு-

IMG_2828வவுனியா திருநாவற்குளம் பாரஊர்தி தரிப்பு நிலையத்திற்கு முன்பாக அமரர் தோழர் தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ) அவர்களின் ஞாபகார்த்தமாக இன்று பேருந்து தரிப்பு நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. மேற்படி பேருந்து தரிப்பு நிலையத்;தின் திறப்புவிழா ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் திருமதி சோதிமதி நகுலேஸ்வரம்பிள்ளை அவர்களின் தலைமையில் இன்று (03.09.2014) காலை 10.30மணியளவில் இடம்பெற்றது.

வவுனியாவின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஏற்பாட்டில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பேருந்து தரிப்பு நிலையத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் புளொட்டின் வன்னிப் பிராந்திய இணைப்பாளர் திரு க.சிவநேசன் (பவன்), பிரதேச சபை உறுப்பினர்கள் திரு இராஜசேகரம் (சேகர், திரு. ஜெகதீஸ்வரன் (சிவம்) மற்றும் திரு.செந்தில் அவர்களும், புளொட் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள், பொதுமக்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இன்று எமது அபிவிருத்திகள் பன்முகப்படுத்தப்பட்டு, பல வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எமது மறைந்த தோழர் இளங்கோ எமது அமைப்பின் வளர்ச்சியிலும், மக்கள் பணிகளிலும் என்றும் பின்நின்றதில்லை. அவரின் ஞாபகார்த்தமாக இன்று இவ் பேரூந்து தரிப்பு நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வட மாகாணசபையில் 30 ஆசனங்கள் எமக்கு இருக்கின்றது, இது தனிப்பட்ட நபருக்கோ தனிப்பட்ட கட்சிக்கோ கிடைத்த வெற்றியல்ல, ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றியாகும். தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை தலைநிமிர வைக்க வேண்டுமானால் நாம் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

IMG_2764IMG_2745010203060504IMG_2779 (1)

இந்திய அதிகாரி பயணித்த கார் அதிவேக வீதியில் விபத்து-

karadiyanaru accidentஇந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாணந்துறைக்கும் தொடங்கொடைக்கும் இடையிலான 21ஆம் மைல் கல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் பாதுகாப்பு சுவரில் மோதியுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது அந்த வீதியில் பயணித்த எம்பியூலன்ஸ் ஒன்றில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தார். சுரேஷ் ராவ் என்ற குறித்த அதிகாரியின் உடல்நிலை தேறியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரம் பெற்றால் மிருகபலி பூஜை செய்யலாம்-

Munneswaram_CIஅனுமதிப்பத்திரம் ஒன்றை பெற்ற பின்னர் சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிருகபலி பூஜை செய்யலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கான அனுமதிப்பத்திரத்தை சிலாபம் பிரதேச சபையில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மிருக பலி பூஜையின் மூலம் விலங்குகள் சித்திரவதை சட்டம் மீறப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு தேசிய பிக்குகள் சம்மேளனம் உள்ளிட்ட சில அமைப்புக்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க…… Read more

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 29வது நினைவுதினம் அனுஷ்டிப்பு- யாழ். தாவடியில், யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில்

SAM_2012SAM_2010இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2014) அனுஷ்டிக்கப்பட்டது.

29வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினரும், தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவருமான திரு.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இன்றுகாலை 7மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டமும் இடம்பெற்றது.

SAM_2019SAM_2026SAM_2029SAM_2033SAM_2035SAM_2097SAM_2054SAM_2043SAM_2095SAM_2114SAM_2107SAM_2104SAM_2085SAM_2101SAM_2079SAM_2175இதன்போது தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களுள் ஒருவரான பேராசிரியர் சி.க..சிற்றம்பலம் அவர்கள் பிரதான நினைவுரையினை ஆற்றினார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி, லண்டனிலிருந்து வருகைதந்திருந்த அரசியல் பிரமுகர் சிறீ கெங்காதரன், வலி வடக்கு; பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு. குமாரவேல், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் திரு. பிரகாஸ், வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி.நாகரஞ்சனி ஐங்கரன்,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வை.பாலச்சந்திரன், வலி.தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் கணேசவேல், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் பரமேஸ்வரலிங்கம், அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், அமரர் தர்மலிங்கம் அவர்களின் ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும், இந்நிகழ்வினில் கலந்து கொண்டிருந்தனர்.

SAM_2132SAM_2125SAM_2126SAM_2147SAM_2139இதனைத் தொடர்ந்து அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு கல்லூரியின் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு இரங்கல் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, கல்லூரியின் பீடாதிபதி திரு.அமிர்தலிங்கம், லயன் வைத்தியக் கலாநிதி தியாகராஜா, திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இங்கு உரையாற்றிய பீடாதிபதி திரு.அமிர்தலிங்கம் அவர்கள், கல்வி வளர்ச்சிக்காக இக் கல்லூரியினை அமைப்பதற்கு 230 பரப்புக் காணியை தனது தந்தையாரின் பெயரில் திரு. சித்தார்த்தன் அவர்கள் வழங்கியிருந்தார் என்பதை நினைவுபடுத்தியதுடன், கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கல்வியியற் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியரும், பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அமரர் வீ. தர்மலிங்கம் அவர்களது நினைவாக இன்று நண்பகல் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

புதிய மனித உரிமை ஆணையாளர் தொடர்பில் அரசாங்கம் நம்பிக்கை-

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளராக புதிதாக பதவியேற்றுள்ள செயிட் அல் ஹூசைன் இலங்கை பிரச்சினை தொடர்பில் சரியான அணுமுறையுடன் செயற்படுவார் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல கூறியுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையில் இதனைக் கூறியுள்ளார். நவநீதம்பிள்ளையின் செயற்திட்டம், மற்றும் ஆதாரமற்ற வகையிலான பக்கச்சார்பான பேச்சு மிகவும் வருந்தக்கது. எனினும் தற்போது புதிதாக பதவியேற்றுள்ள ஆணையாளர் இவ்வாறு இல்லாமல் இலங்கை விடயத்தில் உரிய அணுகுமுறையை கடைப்பிடிப்பார் என இலங்கை எதிர்பார்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜப்பான் பிரதமர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் ஜப்பான் பிரதமர் ஸின்சோ அபே உள்ளிட்ட குழுவினர் செப்டம்பர் 7ஆம், 8ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக கூறப்படுகின்றது. ஜப்பானிய பிரதமர் ஒருவர் 24 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பமாக இது அமைகிறது. ஜப்பானிய முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் அபே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட அறுபது ஆண்டுகள் பூர்த்தியானதனை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் அபேயின் இலங்கை விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்யுமாறு கோரிக்கை-

ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை உடன் கைதுசெய்யுமாறு மீனவ பிரதிநிதிகள் வலிறுயுத்தல் விடுத்துள்ளனர். தி ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கைதுசெய்யப்படும் மீனவர்களின் படகுகளை தடுத்து வைக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு தாமே ஆலோசனை கூறியதாக சுப்பிரமணியன் சுவாமி நேற்று தெரிவித்திருந்தார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்திற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே, தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிய குற்றத்துக்காகவும் சுப்பிரமணியன் சுவாமியை உடன் கைதுசெய்வேண்டும் என தமிழக மீனவ பிரநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளை வாசிக்க……… Read more

ஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது – சுனில் வடகல-

janthipathiyaal meendum (2)ஊவா மாகாண சபை தேர்தலின் பின்னர் நடைபெறவுள்ளதாக கூறப்படும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு போட்டியிடுவதற்கு காணப்படும் தடைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி, மேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். அது தெளிவான சட்ட விவாதமாகும். நாட்டில் பொருட்கோடல் கட்டளை சட்டம் என்ற சட்டம் உள்ளது. இந்த கட்டளை சட்டத்திற்கு அமைவாக கடந்த காலங்களுக்கு செல்லுப்படியாகும் வகையில் சட்டத்தை நெறிப்படுத்த முடியாது 18ஆவது அரசியலமைப்பு என்பது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தை புறம்தள்ளிய திருத்தமாகும். ஆனால் இந் திருத்தத்தைக் கொண்டுவரும்போது அதில் உள்ளடக்கப்பட வேண்டிய ஒரு விடயத்தை மறந்து விட்டனர். அதாவது கடந்த காலங்களுக்கும் செல்லுப்படடியாகும் அல்லது உள்ளடங்கும் என்ற விடயத்தை உள்ளடக்க மறந்து விட்டனர். ஏனெனில் தற்போதைய ஜனாதிபதி 17ஆவது அரசியலமைப்பின் அடிப்டையிலேயே பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அப்போது 18ஆவது அரசியலமைப்பு வரவில்லை. இதனடிப்படையில் அரசியலமைப்பின் 31ஃ2 பிரிவிற்கு அமைவாக 2ஆவது பதவி காலத்தில் மாத்திரமே அவரால் இருக்கமுடியும். ஆகவே தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் மூன்றாவது பதவிக்காலத்திற்காக ஜனாதிபதியால் போட்டியிட முடியாது என்றார் அவர்.

வவுனியா பொடியன் பொலிஸாரால் கைது-

images feவவுனியாவில் கடந்த சில மாதங்களாக வவுனியா பொடியன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கொன்றை இயக்கிவந்த சிறுவன் ஒருவன் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா தோணிக்கல் காந்திவீதியை சேர்ந்த நவரத்தினசாமி கிருஸாந் என்ற 16 வயது சிறுவனொருவனே இவ்வாறு வவுனியா பொடியன் என்ற பெயரில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் கணக்கொண்றை இயக்கி வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளான். விபுலாநந்தா கல்லூரியில் சாதாரணதரத்தில் கல்வி பயிலும் இம் மாணவன் வவுனியா பொடியன் என்ற பெயரில் வவுனியாவை சேர்ந்த பல அரசியல்வாதிகள். சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சமூகத்தில் அறியப்பட்ட பலரையும் அவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து வந்திருந்தான். இந்நிலையில் பொதுமக்கள் வவுனியா பொடியன் என்ற கணக்கு தோணிக்கல்லில் இருந்தே இயக்கப்படுவதை அறிந்து சிறுவனின் வீட்ற்கு சென்றுள்ளனர். எனினும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு இப்பகுதி கிராம சேவகருக்கு தகவல் வழங்கப்பட்டு கிராம சேவகர் மூலமாக வவுனியா பொலிஸாரிடம் மேற்படி சிறுவன் ஒப்படைக்கப்பட்டிருந்தான். இதனையடுத்து சிறுவனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more