Header image alt text

ஐந்து மாவட்டங்களிலும் த.தே.கூ வேட்புமனு தாக்கல்-

rrtyவடக்கு, கிழக்கிலுள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. இதன்படி வடக்கு கிழக்கு தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் அடங்கிய வேட்புமனுக்களானது அந்தந்த மாவட்டச் செயலகங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்திலும், வன்னித் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்திலும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்திலும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பொன்.செல்வராஜா தலைமையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலும், அம்பாறை தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு ரெலோவின் பொதுச் செயலாளர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் அம்பாறை மாவட்டச் செயலகத்திலும் பிற்பகல் 2.45 மணிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ், வன்னி, மட்டு மாவட்ட வேட்பாளர்கள்-

tna (4)யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியில் மாவை சேனாதிராஜா தலைமையில் சிவஞானம் சிறீதரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், அருந்தவபாலன், மதினி நெல்சன் ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ந.அனந்தராஜ் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ சார்பில் என். சிறீகாந்தா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் சாள்ஸ் இருதயநாதன் (இவர் கடந்த மாகாணசபைத் தேர்தலில் புளொட் சார்பில் போட்டியிட்டவர்), றோய் ஜெயக்குமார், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர் டொக்டர் சிவமோகன் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவர் அடைக்கலநாதன் வினோநோகராதலிங்கம் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமாள் பழனியாண்டி(செல்லத்துரை) ஆகியோரும், புளொட் சார்பில் வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவனேசன் அவர்களும் களமிறங்கியுள்ளனர். மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் பொன். செல்வராஜா, பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், ஜீ.சௌந்தரராஜன், சிறிநேசன், ரெலோ சார்பில் கோ. கருணாகரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் இரா.துரைரெட்ணம், புளொட் சார்பில் சதாசிவம் வியாளேந்திரன் (அமல்மாஸ்டர்) ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

வவுனியாவில் 26வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.!(படங்கள் இணைப்பு)

IMG_9954வவுனியாவில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால்(புளொட்) சகல கிராமங்களிலும் நிரந்தர பேரூந்து தரிப்பு நிலையங்கள், நூல் நிலையங்கள், பொது நோக்கு மண்டபங்கள், முன்பள்ளிகள், தாய் சேய் நிலையங்கள் என பல்வேறு அபிவிருத்திகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் புளொட் அமைப்பு, அவற்றின் தேவையும் பயன்பாடும் கருதி மக்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க எமது புலம்பெயர் தேசக் கிளைத் தோழர்களின் பங்களிப்புடன் கழகத்தின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பணிப்புரைக்கமைய, கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆரம்ப புனரமைப்பு பணிகளில் கழகத்தின் தோழர்களான நிஷாந்தன், ரவி, காண்டீபன் ஆகியோருடன், அம்பாறை மாவட்டத்திலிருந்து வருகை தந்த தோழர் டாக்டர் சோதி(அ.ஜெயகுமார்) ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தோழர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் வீரமக்கள் தினத்தின் நிகழ்வுகள் எதிர்வரும் 13.07.2015 அன்று காலை 10.00 மணிமுதல் ஆரம்பமாகி இறுதி நிகழ்வுகள் 16.07.2015 மாலை 4.00 மணி தொடக்கம் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எமது பணிகளில் இணைய விரும்புவோர் மாவட்ட இணைப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.                 திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்)- 0094779942797

Read more

வவுனியாவில் 26வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் கல்விக்கான உதவி.!(படங்கள் இணைப்பு)

IMG_9977வவுனியாவில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால்(புளொட்) சகல கிராமங்களிலும் வீரமக்கள் தினம் முன்னெடுக்கப்பட இருக்கும் இக்காலப்பகுதியில், கல்வியின் தேவை கருதி தமிழ் தேசிய இளைஞர் கழகம் அதன் ஸ்தாபகர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரின் பணிப்புரைக்கமைய கழகத்தின் அமெரிக்க கிளையினால் கல்விக்கான சிறு உதவி இன்று (09.07.2015) வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவியானது பாவற்குளம் கனேஸ்வரா வித்தியாலய உயர்தர மாணவியின் கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுதொகைப்பணம் கழகத்தின் அறிவொளி இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் அவர்களுடன் திரு. அ.ஜெயகுமார் (டாக்டர் சோதி), திரு. ரவி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more

தமிழர்களை பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டது-ஆணையாளர்-

al hussainஇலங்கைத் தமிழ் மக்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டதாக மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் {ஹசைன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற பொஸ்னிய இனப்படுகொலை தொடர்பான விவாதத்தின் போது, வீடியோ கொன்பரன்ஸ் மூலமாக அவர் இதனைக் கூறியுள்ளார். படுகொலைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒன்றுபட்டிருக்க வேண்டும். கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் யுத்தத்தில் பலியான பொது மக்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. தற்போது சூடான், புருண்டி மற்றும் மியன்மார் போன்ற நாடுகளிலும் இந்த நிலைமை காணப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சிகளும் வேட்புமனு தாக்கல் பற்றிய தகவல்களும்-

postal_votes_2முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பமனுவில் அவர் கைச்சாத்திட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார். மஹிந்த வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவார் என அவரது ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். இதற்கிடையில் முன்னிலை சோசலிச கட்சி காலி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை நாளை சமர்ப்பிக்கவுள்ளது. வவுனியா, புத்தளம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைத் தவிர, ஏனைய மாவட்டங்களில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவிருப்பதாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, திருகோணமலை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் குருநாகலை ஆகிய மாவட்டங்களில் அக்கட்சி ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது. இதற்கிடையில், நாளை தமது கட்சி வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் என ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியில் இருந்து விலகிச் சென்ற முன்னிலை சோசலிச கட்சியும், இந்த முறை முதல் முறையாக தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி, ஏழு மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது சம்மந்தமாக ஆலோசித்து வருவதாக அதன் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை தேர்தலில் தனித்து போட்டியிட சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது. அதன்படி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவென இன்றுவேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்-வடக்கு முதல்வர்-

vigneswaranபொறுப்புக் கூற வேண்டிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் வடமாகாண முதலைமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள விக்னேஸ்வரன், த ஹில் என்ற சஞ்சிகைக்கு எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். கடந்தகால ஊழல்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து புதிய அரசாங்கத்தின்கீழ் இலங்கை முன்னேற முயற்சிக்கிறது. இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தி, பொறுப்புடைமை மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு அமெரிக்காவும், சர்வதேச நாடுகளும் பல்வேறு வழிகளில் உதவ முடியும். அதேநேரம் வடக்கில் இருந்து இராணுவக் குறைப்பை மேற்கொள்ளல், பொது மக்களின் காணிகளை விடுவித்தல், போன்ற விடயங்களிலும் இலங்கை அரசாங்கம் அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் குறித்து கடற்படை தளபதிகளிடம் விசாரணை-

navy2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காணாமல் போன 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் குறித்த வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, இந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் தற்போதைய கடற்படைத் தளபதி வயிஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக இரகசிய காவற்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் மேலும் பல கடற்படை அதிகாரிகளிடமும் இது குறித்து வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக இரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தினர். இந்த சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி இருந்தனர். இக் காலப்பகுதியில் கடற்படைத் தளபதியாக இருந்த வசந்த கரன்னாகொடவின் பணிப்புரையின் பேரில், டி.கே.பி. ஜனநாயக்கவின் தலைமையில் விசேட புலனாய்வு பிரிவு ஒன்று செயற்பட்டது. இந்த பிரிவே குறித்த கடத்தல்களை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மைத்திரி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை-ராஜித சேனாரத்ன-

rajithaஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்புமனு வழங்குவது தொடர்பாக இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்கப்படமாட்டாது என அண்மையில் நீங்கள் கூறியிருந்தீர்கள். இது பொய்யாகிவிட்டதே என அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், நான் ஒருபோதும் பொய் கூறவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியவற்றையே தான் கூறியதாக அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் யாருக்கு வேட்புமனு வழங்குவது என்பது தொடர்பாக ஜனாதிபதியே இறுதி முடிவெடுப்பார் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் மேலும் பல மனித எச்சங்கள் மீட்பு-

trincoதிருகோணமலை, மெக்கெய்ஸர் மைதானத்தில் நேற்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் மேலும் நான்கு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை நீதவான் முன்னிலையில்,மெக்கெய்ஸர் மைதானத்தில் நேற்று (மூன்றாவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய கடந்த ஆறாம் திகதி குறித்த மைதானத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதேவேளை, திருகோணமலை கிண்ணியா பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் 60 மில்லிமீற்றர் ரக குண்டை உப்பாறு பகுதிக்கு கொண்டுசென்று செயலிழக்க செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மீண்டும் ஊடகக் கட்டுப்பாடு-

oodahamஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு கவலை வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர்களை சட்டத்தில் தண்டிக்கவோ, அவர்களுக்கு அபராதம் விதிக்கவோ அதிகாரம் வழங்கும் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளது. இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அமுலில் இருந்த ஊடக ஒழுங்குமுறைக் குழுவை கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கினார். மேலும் ஊடங்களில் மீதான கட்டுப்பாடுகளையும் கலைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை மீண்டும் அமைத்து இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது போன்ற நடவடிக்கை இலங்கை அரசு எடுத்திருப்பது சர்வதேச ஊடகவியலாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழிவின் விளிம்பில் துவாலு: நாட்டைக் காக்குமாறு பிரதமர் வேண்டுகோள்-

countryபுவி வெப்பமயமாதலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள, உலகின் நான்காவது மிகச்சிறிய நாடான துவாலு அழிவின் விளிம்பில் உள்ளது. அதனைக் காக்குமாறு அந்நாட்டுப் பிரதமர் தனது உருக்கமான வேண்டுகோளை உலக நாடுகளிடம் விடுத்துள்ளார். பாரிஸில் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா. பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்திலான பயணத்தை துவாலுவின் பிரதமர் எனிலே ஸ்போகா மேற்கொண்டுள்ளார். பசுபிக் பெருங்கடலில் அவுஸ்திரேலியா மற்றும் ஹவாலிக்கு நடுவே குட்டித் தீவுகளைக் கொண்ட நாடு தான் துவாலு. வெறும் 10,000 பேருக்கான தேசமாக உள்ள துவாலு, பருவ நிலை மாற்றத்தால் உடனடியாகப் பாதிக்கப்படும் நாடாகப் பதிவாகியுள்ளது. புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க வேண்டும் என்ற இலக்கை, விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின்படி 1.5 டிகிரி செல்சியஸாக மேலும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் துவாலு நாட்டின் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

“புளொட்” சுவிஸ் கிளையின், 26ஆவது “வீரமக்கள் தின” நிகழ்வு..!!

S0016013தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் 26ஆவது வீரமக்கள் தின நிகழ்வு 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich என்னுமிடத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி வீரமக்கள் தின நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நடைபெற்ற தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தின் சுவிஸ் வாழ் மாணவ. மாணவியருக்கான பரீட்சைப் போட்டி அன்றுகாலை 9மணியளவில் அக வணக்கத்துடன் ஆரம்பமாகியது.

இதன் ஆரம்ப நிகழ்வாக பாலர் பிரிவுக்கான பாட்டுப் பாடுதல், கதை சொல்லுவது போன்ற நிகழ்வுகளை செல்வி. புஷ்பானந்தசர்மா ஷபானியா, செல்வி அரிராஜசிங்கம் ஆர்த்திகா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

அத்துடன் கீழ்ப்பிரிவு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பரீட்சைகள் திருமதி. புனிதவதி ரட்ணகுமார், திருமதி தவச்செல்வி கருணாகரன், திருமதி. சந்திரா அரிராஜசிங்கம் ஆகியோரின் மேற்பார்வையில் திருமதி. சுகந்தினி சசீந்திரன், திருமதி புஷ்பானந்த சர்மா வதனாம்பாள், செல்வி கெங்காதரன் அபிநயா, செல்வி புஷ்பானந்தசர்மா ஷபானியா, செல்வி ஆர்த்திகா அரிராஜசிங்கம், செல்வி கேதாரணி ரட்ணகுமார், செல்வன் ரதீஸ்வரன் சயந்தன்,ஆகியோரின் கண்காணிப்பில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Read more

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்சபைக் கூட்டம்-

DPLFஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொதுச்சபைக் கூட்டம் வவுனியா கோவில்குளம் அறிவொளி இல்லத்தில் நேற்று (07.07.2015) செவ்வாய்க்கிழமை காலை 10மணியளவில் கட்சியின் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சமகால அரசியல் நிலைமைகள், கட்சியினுடைய செயற்பாடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் என்பவை தொடர்பாக ஆழமாக கலந்துரையாடப்பட்டது.

இறுதியாக யாழ் மாவட்டத்திற்கு திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு திரு. சதாசிவம் வியாளேந்திரன் (அமல் மாஸ்டர்) அவர்களையும் வேட்பாளராக நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டதுடன், மற்றைய மூன்று மாவட்டங்களுக்குமான வேட்பாளர்களை நியமிப்பதற்கு தலைவருக்கும் செயலாளருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

குறிப்பு: இன்று (08.07.2015) புதன்கிழமை திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களை வன்னி மாவட்ட வேட்பாளராக நியமிப்பது என்று முடிவெடுத்துள்ளதாக கட்சியின் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்தார்.

Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக பிரான்ஸ் கிளையின் செயற்குழு கூட்டம்-(படங்கள் இணைப்பு)

ploteதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
பிரான்ஸ் கிளை
01-07-2015

இன்று பிரான்ஸில் ‘லாகூர்னோவ்’; என்னும் இடத்தில்; தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரான்ஸ் கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

காலத்தின் தேவை கருதி இக் கூட்டம் கூட்டப்பட்டது. இக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது

*  இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார பிரச்சனை

Read more

சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-

676யாழ். சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கௌரவ. விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.

இவ் நிகழ்வில் கௌரவ. விருந்தினராக கலந்து சிறப்பித்த வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில் இனறு இவ் நிகழ்வில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று இவ் மலைகள் இவ் நிகழ்சசிகளில் பங்கு பற்றுகின்ற ஆர்வம் அவர்கள் கொண்டுள்ள விருப்பம் அவர்களின் மனதில் கொண்டுள்ள மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி நிற்கிறது. இவ்வறான மகிழ்வான நிலைகள் கற்றல் கற்பித்தல் சூழல்களில் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மாணவர்களின் கற்றல் திறன் பன் மடங்கு அதிகரிப்பதற்கன சந்தர்ப்பத்தினை உருவாக்கும்.

Read more

தபால் மூல வாக்களிப்பு தினம் அறிவிப்பு-

postal_votes_2எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை 3 நாட்களுக்கு முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி ஆசிரியர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 3ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது. ஏனைய அரச நிறுவனங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ளது. தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். தபால் மூலமான வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 2014ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அலுவலகங்களின் தொலைபேசி இலக்கங்களின் மூலமோ கையடக்க தொலைபேசி இலக்கங்களின் மூலமோ அறிந்துகொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் சார்பாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ. அமரதாச தெரிவித்தார். அலுவலக தொலைபேசி இலக்கங்கள் – 0112868441, 0112868442, 0112868443 கையடக்க தொலைபேசி இலக்கங்கள்- 0710317117, 0717346030, 0710317112, 0717346084, 0717346423, 0717346436, 0717346373

யாழில் இதுவரை ஆறு அரசியல் கட்சிகள் விண்ணப்பம்-

voteநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்றுவரை ஆறு அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுள்ளதுடன் மேலும், இரு சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளதாக யாழ்.மாவட்ட உதவி தேர்தல் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஓகஸ்ட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்யும் கால எல்லை எதிர்வரும் 13ஆம் திகதி நண்பகலுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஆறு அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பபடிவங்களை உதவி தேர்தல் ஆணையாளர் பணிமையில் பெற்றுள்ளனர். எனினும் ஒரு அரசியல் கட்சியே இன்றுவரையான காலப்பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இதேவேளை, வேட்புமனு தாக்கல் கடந்த 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மாகாண சபை உறுப்பினர் கைது-

arrestமுச்சக்கர வண்டி சாரதி ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேல்மாகாண சபை உறுப்பினர் துஷார பெரேரா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்து ஒன்று தொடர்பிலேயே அவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி விமானநிலைய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி சந்தேகநபரான துஷாரவின் வாகனத்தை சோதனையிட்டபோது, அதிலிருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்றுபகல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ் நீதிமன்றத் தாக்குதல் தொடர்பில் மற்றுமொருவருக்கு விளக்கமறியல்-

jaffna courtsயாழ். நீதிமன்ற கட்டடத்தின்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மேலுமொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் ஏழாலை வடக்கு பகுதியில் வசிக்கும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. வீடியோ ஆதாரங்களுடன் குறித்த சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாக யாழ் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதற்கமைய இவரை எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, நீதிமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள 37 சந்தேகநபர்கள் எதிர்வரும் 10ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளால் ஆபத்து இல்லையென தமிழக அரசாங்கம் அறிக்கை-

tamilnaduமுல்லைப்பெரியார் அணைக்கு புலிகளால் ஆபத்து இல்லை என தமிழக அரசாங்கம் இந்திய உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அணையின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் இடம்பெறலாம் என கடந்தவாரம் தமிழக அரசாங்கம், தேசிய புலனாய்வு அறிக்கையை ஆதாரம் காட்டி சத்தியக் கடதாசிஒன்றை உயரநீதிமன்றில் சமர்ப்பித்திருந்தது. அதில் விடுதலைப்புலிகளின் பெயரையும் புலனாய்வுத்துறை இணைந்திருந்தது. எனினும் இதனை தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. இந்நிலையில் நேற்றையதினம் தமிழக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.

கொடிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தல்-

mahindaபொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளின் போது, தேசிய கொடிகள், மதம் சார்ந்த கொடிகள், மாகாண கொடிகள் மற்றும் பாடசாலை கொடிகளை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். அரசியல் கூட்டங்கள் நடத்தப்படுவதானால் கட்சியின் கொடியை மாத்திரம் பயன்படுத்துமாறு ஆணையாளர் கடிதம் மூலம் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். இதனிடையே, பொதுத் தேர்லுடன் தொடர்பான வேட்பு மனு தாக்கல் செய்யும் மூன்றாவது தினம் இன்றாகும். நேற்றை தினம் வரையில் 61 சுயாதீன குழுக்கள் கட்டுப்பனங்களை செலுத்தியுள்ளன. அதுபோல் இரண்டு கட்சிகளும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

காணாமல் போன தந்தை,மகன் தொடர்பில் தகவல் கோரல்-

dகடந்த ஒரு வருடங்களாக யாழ். உடுவில் மானிப்பாய் வீதியில் வசிக்கும் இளம் குடும்பத்தரான பிறேம்குமார் நிந்துஜன் வயது 30 மற்றும் அவருடைய மகன் நிந்துஜன் தரணிகன் வயது 03 காணாமல் போயுள்ளார்கள். இவர்கள் காணாமல் போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில அவருடைய மனைவியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இவர் சம்பந்தமான எந்தவொரு தகவலும் இதுவரையில் கிடைக்கப்பெறாத நிலையில் இவர்கள் சம்பந்தமான விபரங்களைத் தந்துதவும்படி சுன்னாகம் பொலிசாரினால் பொது மக்களிடம் இருந்தும் கோரப்பட்டுள்ளது. இவர்கள் சம்பந்தமான தகவல் தெரிந்தவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கம் 0212240323 அல்லது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0774673943 தொலைபேசியுளுடனேயோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புதிதாக ஐந்து நாடுகளுக்கான தூதுவர்கள் நியமனம்-

sri lanka (4)ஐந்து நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.ஸ்கந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டொக்டர் ஏ.எஸ்.யூ.மென்டிஸ் பஹ்ரேனுக்கான தூதுவராகவும் ஏ.ஜவாட் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மனிஷா குணசேகர தென்கொரியா தூதுவராகவும் எம்.கே.பத்மநாதன் ஓமான் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.