Header image alt text

கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு

Tnaஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆசன பங்கீட்டு விபரம்

யாழ் மாவட்டம்: தமிழரசுக்கட்சி – 6 , ஈபிஆர்எல்எவ் – 2 , புளொட் 1 , ரெலோ 1

வன்னி மாவட்டம்: தமிழரசுக்கட்சி – 3 , ரெலோ 3 , ஈபிஆர்எல்எவ் – 2 , புளொட் – 1

மட்டக்களப்பு மாவட்டம்:  தமிழரசுக்கட்சி –5,  ஈபிஆர்எல்எவ் – 1,  புளொட் 1,  ரெலோ 1

திருகோணமலை மாவட்டம்: தமிழரசுக் கட்சி – 4 ஈபிஆர்எல்எவ் – 1 ரெலொ- 1  புளொட்-1

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தியா?

t_n_aஇலங்கையின் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் தொகுதிப் பங்கீடு, தமிழரசுக் கட்சி தவிர்த்த பிற கட்சிகளால் சுமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
தொகுதிப் பங்கீட்டில் திருப்தி இல்லையென்றாலும் ஒற்றுமைக்காக இதனை ஏற்றுக்கொண்டிருப்பதாக கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்த முடிவுகள் ஒரு கட்சியின் நலன்களைக் கருத்திற்கொண்டு மேற்கொண்டதாகத் தெரிவதாகவும், ஒற்றுமையைக் கருத்திற்கொண்டும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டும் இந்த முடிவுகளை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர். Read more

முன்னாள் போராளிகள் போட்டியிடுவது உரிய பலனைத்தராது – சந்திரகாந்தன்
 
pillayanவிடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளது தமிழ் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறுகிறார்.
 
அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். Read more

வவுனியாவில் காணமல் போனோரின் கவனயீர்ப்பு துண்டுப்பிரசுரம் விநியோகிப்பும், கூட்டமைப்பு தலைவர்களுடனான சந்திப்பும்-(படங்கள் இணைப்பு)

unnamed (1)இன்றையதினம் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் துண்டுப்பிரசுர விநியோகத்தினை வவுனியா நகர் எங்கும் மேற்கொண்டனர். இதில் பிரஜைகள் குழு தலைவர் தேவராஜா, முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வவுனியா நகர சபையின் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் த.நிகேதன் மற்றும் ராஜா ஆகியோரும் உறவுகளுடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணமல்போன உறவுகளை தேடுவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இவ் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா சம்பந்தனுடன், அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்புடன், வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

IMG_9868தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் இன்றையதினம் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்சியின் உறுப்பினர்கள் சந்தித்து தமது நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பற்றிய கலந்துரையாடல்-

tna (4)வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதன் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் முடிவுகளை எடுக்கும் கலந்துரையாடலில் இன்றையதினம் ஈடுபட்டுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவ்வாறான வியூகங்களை வகுத்து தேர்தலுக்கு முகங்கொடுப்பது மற்றும் கூட்டமைப்பு கட்சிகள் ஒற்றுமையாக எவ்வாறு பிரசாரங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மட்டு. 04 சுயேட்சைகள் கட்டுப்பணம், தேர்தல் தொடர்பில் 12 முறைப்பாடுகள்-

money paidஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நண்பகல் வரை நான்கு சுயேற்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் செயலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்ய பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன தலா ஒரு ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன. இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மேற்படி 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களது ஆக்கத்திறன் மேம்பட நூலகங்கள் அவசியம்-வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர்-(படங்கள் இணைப்பு)

P1040008யாழ். தொல்புரம் கிழக்கு விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தில் வேள்ட்விசன் நிறுவன அனுசரனையுடன் மாணவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழ்வின்போது வலிமேற்கு பிரதேசசபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று இவ் நூலகத்தினை ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்வடைகின்றேன். எமது பிரதேசத்தில் வேள்ட்விசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் கிராமங்களில் உள்ள சனசமூக நிலையங்களில் நூலகங்களை ஆரம்பிக்கும் செயல்திட்டத்தினை நிகழ்தி வருகின்றோம். உன்மையில் இதன் நேக்கம் குறித்த கிராமங்களில் உள்ள பாடாலைச் சிறுவர்கள் இவ் நூலகங்களினை பயன்படுத்துவதனூடாக உயர்நிலை அடைவதே ஆகும். இவ் செயல் திட்டத்தின் வெறறிக்கு கிரமத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வாசிப்பதன் ஊடாக மனிதன் பூரணம் அடைகின்றான் என்பாது உயர்தோர் கருத்தாக உள்ளது. இந்நிலையில் இன்றுள்ள மாணவர் சமூதாயத்தினை வாசிக்க தூண்ட வேண்டும்.

Read more

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி-(படங்கள் இணைப்பு)

Sயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி நேற்று (04.07.2015) சனிக்கிழமை மாலை 3.15அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள் தற்போது மீள்குடியேறியுள்ள நிலையில்; சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு இந்த சனசமூக நிலைய முன்பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.

சமூக ஆர்வலர் திரு. கெங்காதரன் அவர்களது ஏற்பாட்டில் ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையத் தலைவர் திரு. இ.விஸ்வரஞ்சன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. அவர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியினை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பே.மயூரதன், (முன்னாள் கிராமசேவையாளர், புன்னாலைக்கட்டுவன் வடக்கு), அ.ரஜீபன் (கிராம சேவையாளர், புன்னாலைக்கட்டுவன் வடக்கு) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக பிரபாலினி புவனனேந்திரன் (உப அதிபர், யாழ். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியாலயம்), குமாரசிவம் சுரேந்திரன் (அரசாங்க நில அளவையாளர், கிளிநொச்சி) ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

Read more

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா.!(படங்கள் இணைப்பு)

IMG_9784வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் 18வது வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா இன்று (05.07.2015) பூந்தோட்டம் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக அழைக்கப்பட்ட வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் தவிர்க்கமுடியாத காரணத்தினால் சமூகமளிகவில்லை. இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை வங்கி நகரக் கிளையின் முன்னாள் முகாமையாளர் திரு எம்.றோய் ஜெயக்குமார், வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய அதிபர் திருமதி கே.நந்தபாலன், வைத்தியர்களான வி.துஷ்யன், கலைச்செல்வன், பஞ்சலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். கௌரவ விருந்தினர்களாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரவீந்திர உமாசுதகுருக்கள், மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா கௌரவ க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Read more

புலம்பெயர் உறவின் பிறந்த நாளில் முல்லைத்தீவு பெண்ணுக்கு உதவி-

photo 1புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த சங்கீதா தனது பிறந்த தினமான இன்று போரினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த முல்லைத்தீவைச் சேர்ந்த அருள்தாஸ் சிவரஞ்சினி அவர்களுக்கு உதவியுள்ளார். இதன்படி அவரின் வாழ்வாதாரத்திற்கான சுயதொழில் முயற்ச்சிக்காக சங்கீதா அவர்கள் சுமார் 30,000 ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளார். இவ் சமூக சிந்தனையுள்ள சங்கீதாவுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் இனிய பிறந்த hள் வாழ்த்துக்கள். இது போன்று எமது தாயக உறவுகளின் மூன்று வேளை உணவுக்கு வழி செய்வதற்கு உங்களது பிறந்த நாள் நிகழ்வுகள் போன்றவற்றின்போது இவ்வாறான உதவிகளை செய்ய முன்வாருங்கள் மனிதாபிமான உள்ளம் கொண்ட சங்கீதா போன்றவர்கள் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். (வட்டு இந்து வாலிபர் முன்னணி)