Header image alt text

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு- (படங்கள் இணைப்பு)

IMG_3221தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் ஒரு தொகுதியினரான 90 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு. சு.காண்டீபன் தலைமையில், கோவில்குளம் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த பொது நூலகத்தில் இன்றுமாலை (05.01.2016) நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய இளைஞர் கழக ஸ்தாபகரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் திரு. அமுதன், தமிழ் தேசிய இளைஞர் கழக உப தலைவர்களில் ஒருவரும், வயம்பா பல்கலைக்கழக மாணவனுமான திரு இ.சாருஜன், கழக இணைப்பாளர்களில் ஒருவரும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவனுமான சி.இந்துஜன், கழக உறுப்பினர் பி.கெர்சோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் 3வது பொதுக்கூட்டம் கடந்த 27.12.2015 அன்று வன்னி இன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டிற்கான செயற்றிட்டத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம், எமது மாணவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கழகத்தின் செயற்றிட்ட ஆண்டறிக்கையில் கழகம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. Read more

பிரித்தானிய முன்னாள் பிரதமர் இரா. சம்பந்தன் சந்திப்பு-

sampanthan Doniஇலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயருக்கும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் சமர்பிக்கப்பட்ட பிரேரணை குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மீள்குடியேற்றம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, தமிழர்களின் வாழ்விடங்களில் அவர்களை மீளகுடியேற்றுதல் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பிற்கமைய பொருளாதார மாநாடொன்றில் உரையாற்றுவதற்கு டொனி பிளேயர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரப்பாங்கண்டல் பாலைத்தாழ்வில் வெடிபொருள் மீட்பு-

mannarமன்னார் பரப்பாங்கண்டல் பாலைத்தாழ்வு கிராமத்தில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து சக்தி வாய்ந்த வெடிபொருள் ஒன்று மீட்டுள்ளது. தோட்டச் செய்கைகாக குறித்த காணியில் உள்ள மேட்டு நிலப்பகுதியை உழவு இயந்திரத்தினால் உழுது கொண்டிருந்த போது புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடி பொருள் வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பில், உடனடியாக மன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் மன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெடிபொருளை மீட்டனர். மீட்கப்பட்ட வெடி பொருள் சுமார் 10 கிலோ கிராம் எடை கொண்டது எனவும், மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவன்கார்ட் தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்றும் ஆஜர்-

avangardபாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதிக்கு இன்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கே அவரை அழைத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா கூறினார் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி இது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்றைய தினமும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை 6 மணிவரை அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் – இலங்கையிடையே எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து-

sri lanka pakistanஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் இரு நாடுகளுக்கு இடையிலும் கலாசார மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட 8 உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்தாகியுள்ளன. இதன்படி பணச்சலவை, பொருளாதார, வர்த்தக மற்றும் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. நிகழ்வில் உரையாற்றிய பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், எதிர்காலத்தில் இலங்கையின் மேம்பாடுகள் தொடர்பாக தமது அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்படும் என குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த யுத்தகாலத்தில் பாக்கிஸ்தான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என, ஜனாதிபதி மைத்திரிபால கூறினார்.

தமது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் கைதிகள் கோரிக்கை-

jail-002தைப்பொங்கல் பண்டிகையைப் புறக்கணித்து தமது விடுதலைக்கான அழுத்தத்தை கொடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கு விசாரணைக்காக இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று புதிதாக மூன்று கைதிகள் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாக பங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை சமர்ப்பிக்கப்படாத நிலையில் அரசியல் கைதிகளை இம்மாதம் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஒக்டோபர் 12ம் திகதி தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more