Header image alt text

கைதடி வடக்கு அம்பிகா முன்பள்ளியின் கலை விழாவும் பரிசளிப்பும்-(படங்கள் இணைப்பு)

20151231_135133யாழ். கைதடி வடக்கு அம்பிகா முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் – 2015 கைதடி மாதர் அபிவிருத்திச் சங்க முன்றலில் இன்று நடைபெற்றது. கைதடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் உப தலைவர் திருமதி செ.கேதாரகௌரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக திருமதி ப.செல்வநாயகம் (அதிபர், குருசாமி வித்தியாசாலை, கைதடி), திரு. ச.தங்கராசா (முன்னைநாள் பிரதேசசபை உறுப்பினர்), திருமதி சு.தனபாலசிங்கம் (முன்பள்ளி இணைப்பாளர், தென்மராட்சி), திரு. சி.செல்வநாயகம் (செயலாளர், கயிற்றசித்தி கந்தசுவாமி தேவஸ்தானம்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். விருந்தினர்கள் வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய பிள்ளைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும், முன்பள்ளி சிறார்களுக்கான பரிசில்களை வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
Read more

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள்மீது துப்பாக்கிப் பிரயோகம்-

shootதுப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்களை துரத்திச் சென்ற போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவர்மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு கண்டி வீதியில், பேலியகொடை, புலுகஹ சந்தியில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் லொறி ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளானதையடுத்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விட்டு செல்லும்போது, பிரிதொரு நபரினால் மோட்டார் வாகனத்தில் இருந்தவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்களை அங்கிருந்த போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீதும் அந்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இதனால் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு-

passportபுதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளன. வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்கான கட்டணமாக 10,000 ரூபா அறவிடப்படவுள்ளது. இதுவரையில் குறித்த கடவுச் சீட்டுக்கு 7,500ரூபா பணமே அறவிடப்பட்டது. மேலும் சாதாரண சேவையில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்கு இதுவரையில் அறவிடப்பட்ட 2,500 ஷரூபா கட்டணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் கடவுச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கராத்தே சம்பியன் படுகொலை விடயம், மூவர் விடுதலை-

vasantha soysaஅநுராதபுரம், முதித்தா மாவத்தையில் உள்ள பிரபல்யமான இரவு விடுதியொன்றின் உரிமையாளரும் கராத்தே சம்பியனுமான வசந்த சொய்சாவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த 35 பேரில், மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 35 பேரும், அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது நீதவான் உமேஷ் கலன்சூரியவே மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். மூவரை தவிர ஏனைய சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பயணச் சீட்டின்றி ரயிலில் பயணிப்போருக்கு தண்டம் அதிகரிப்பு-

madu trainபயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் பயணிப்போர்களிடமிருந்து அறவிடப்படும் தண்டப் பணத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் ஆலோசனைக்கமைவாகவே இந்நடவடிக்கை 2016 ஜனவரி முதலாம் திகதிமுதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொவர் தெரிவித்துள்ளார். பயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து தற்போது 2500 ரூபா அறவிடப்படுவதாகவும் இது ஜனவரி முதல் 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மிதிபலகை மற்றும் தண்டவாளம் ஆகியவற்றில் பயணிப்போருக்கு எதிராகவும் ரயில்வே திணைக்களம் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரை மிதிபலகையில் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்திருப்பதாகவும் ராகம ரயில் நிலையத்திலேயே அதிகமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

பிரகீத் விவகாரம்; பெண் ஊடகவியலாளரிடம் விசாரணை-

prageeth ekneligodaபிரபல ஊடகவியலார் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான செய்தியை வெளியிட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறித்த செய்தியை வழங்கிய புலனாய்வு உத்தியோகத்தர் யார் என்பது குறித்து, நேற்று இவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவினரால் நடத்தப்பட்டு வரும் நிலையில், அது குறித்து இரகசிய தகவல்களை வெளியிட்டதாக குறித்த ஊடகவியலாளர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர் கடத்தப்பட்டு இராணுவ முகாமொன்றில் கையளிக்கப்பட்டு, அதன் பின்னர் கொலைசெய்து கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல அனுமதி-

jonstonமுன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு பிரதான நீதவான் இன்று வழங்கியுள்ளார். அதற்கமைய ஜனவரி நான்காம் திகதி தொடக்கம் ஏழாம் திகதி வரை பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ வெளிநாட்டிற்கு செல்ல முடியும் என கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலபிட்டிய உத்தரவு பிறப்பித்துள்ளார். சொத்துக்கள் தொடர்பில் தகவல்களை வழங்காமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபருக்கு நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மனைவி சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதன் காணரமாக நகர்த்தல் பத்திரம் ஒன்று ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வெளிநாடு செல்வதற்காக நீதி மன்ற அனுமதியை கோரழ இருந்தார். அதற்கமைய கோரிக்கைக்கான அனுமதி நீதவானினால் வழங்கப்பட்டதோடு 25 இலட்சம் ஷரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more

யாழில் 700ற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை-

resettlementயாழ். குடாநாட்டில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட 701.5 ஏக்கர் காணியில் 700 ற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றக்கூடியதாக இருக்கும் என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட இந்தக் காணிகளை தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர்கள் கையேற்று வேலிகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது யாழ். குடாநாட்டில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்காக 701.5 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தார். நாட்டில் நிலவிய யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோதிலும் யாழ். குடாநாட்டில் மாத்திரம் சுமார் 12,000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களிலும் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் வசித்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 701.5 ஏக்கர் காணியில் விவசாய நவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

வலி வடக்கு, கிழக்கு பகுதி மக்களது தேவைகள் குறித்து பா.உ சித்தார்த்தன் ஆராய்வு-(படங்கள் இணைப்பு)

IMG_3413வலி. வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த 700 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் மீள்குடியேற்றத்துக்காக நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233ஏக்கர் நிலமுமே நேற்று மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி வலி.வடக்கு பகுதியில், காங்கேசன்துறை தெற்கு, பளை வீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் மொத்தமாக 468.5 ஏக்கர் நிலமும், வலி.கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட வளலாய் பகுதியில் 233ஏக்கர் நிலமும் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்குப் பின் தமது சொந்த மண்ணை இடம்பெயர்ந்திருந்த மக்கள் இன்று நேரில்சென்று பார்வையிட்டனர். இதன்போது புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டதோடு அந்த மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

Read more

கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதே பேரவையின் நோக்கம்-சித்தார்த்தன் எம்.பி-
எஸ் நிதர்ஷன்

sithadthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவோ அல்லது மாற்றுத் தலைமையை ஏற்படுத்துவதற்காகவோ தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்படவில்லை. தமிழ் மக்கள் பேரவையானது கூட்டமைப்பிற்குத் துணையாகவும் அதேநேரம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டமொன்றை முன்வைப்பதற்காகவுமே உருவாக்கப்பட்டிருப்பதாக புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் கூட்டமைப்பிற்குள் குழப்பம் என்று கூறுவது தவறு. ஆனால் கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. இவை பேசித் தீர்க்கப்பட வேண்டும். குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கட்சியின் தலைவர் சம்பந்தனும் முரண்பாடுகளைத் தவிர்த்து ஒன்றாக இணைந்து கொள்வது காலத்தின் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டு இரண்டாபது அமர்வும் நடைபெற்று முடிந்திருக்கின்றது. இதில் இணைந்;து கொண்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
Read more

வறக்காபொல வாகன விபத்தில் ஐவர் உயிரிழப்பு-

accdentவரகாபொல – தும்மலதெனிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் குழந்தை இன்று மதியம் உயிரிழந்துள்ளது. விபத்துக்குள்ளான வேனில் இருந்த ஒரு வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவத்தின்போது வேனில்; பயணித்த 5 பேரே பலியாகியுள்ளனர். அத்துடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். பிலியந்தலையிலிருந்து சோமாவதிக்கு யாத்திரீகர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸ{ம், சம்மாந்துறையிலிருந்து கொழும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த வானுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கடவுச்சீட்டை பெறுவதற்கே சம்மாந்துரையிலிருந்து அவர்கள் வானில், பயணித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடை கடத்தல், இருவர் விளக்கமறியலில், ரவீந்ரவுக்கு விளக்கமறியல்-

jailகொழும்பு தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இச்சம்பவம் குறித்து முன்னதாக நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டநிலையில், குறித்த இருவரும் நேற்று கைதானமை குறிப்பிடத்தக்கது. இதன்படி இவர்களை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை கொலன்னாவை நகர முதல்வர் ரவீந்ர உதயசாந்தவை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தியாகிரகம் ஒன்றில் ஈடுபட்டவர்கள்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

புதிய அரசியலமைப்பு குறித்து கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு-

tna mcதமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதன்போது புதிய அரசியலமைப்பு திருத்தம் மற்றும் புதிய தேர்தல் முறை குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாக பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், முன்கூட்டியே சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல்களை கடந்த தினங்களில் இரு கட்சிகளும் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததாகவும் அவர் மேலும் தெரிவி;த்துள்ளார்.

நாமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம்- குமார் குணரட்னத்துக்கு விளக்கமறியல்-

ddfrrr முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிடம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னம் எதிர்வரும் 8ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்றையதினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 4ம் திகதி குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கிழக்கு முதல்வர் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு-

courtsகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதவான் ஏ.எம்.எம் ரியாலினால் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,.

புதிய ஆண்டே புதிய பாதையினை நம்பிக்கையுடன் காட்டிடு-

ranjaniபிறக்கின்ற புதிய ஆண்டாகிய 2016ம் ஆண்டு எங்கள் இன்னல்கள் பல அகன்று விடுதலையின் வித்துக்களின் இலட்சிய கனவுகள் நனவுகள் ஆகிட புதுமையான காலமிது தழிழர் தேசத்திற்கு என பார் எங்கும் போற்றிட சிறைகளில் சிறகிழக்கப்பட்டு உள்ள எம் உறவுகள் வெளிவந்திட, காணாமல் போனரது உறவுகளின் கண்களின் செந்நீருக்கு சிறந்த தீர்வுகள் கிடைத்திட., களையப்பட்டு விரப்பட்டப்பட்ட எம் இனத்தவரது உயர் உழைப்பின் செந் நிலங்கள் எதிரியின் நிழல்களில் இருந்து விடுதலை பெற்றிட, திட்டமிட்டு அழிக்கப்படும் எம் இனத்தின் கால வரலாற்று தடயங்கள் மீண்டும் நிலை பெற்றிட, கூறப்பட்ட நல்லாட்சி மெய்பட்டிட, எம் இனத்தின் துரோகிகளினதும் எதிரிகளினதும் வஞ்சகச் செயல்கள் எரிந்து சாம்பலாகிட, பகைமைகளையும், குரோதங்களையும் மறந்தவர்களாய் விடுதலை மறவர்களின் தியாகத்தின் ஒப்பற்ற தன்மையினை உணர்ந்தவர்களாய் இவ் புதிய ஆண்டில் புதிய பாதையில் கைகோர்த்து இது தழிழர் யுகம் என ஒன்றிணைந்து வெற்றி நடை போட்டிட ஒன்றிணைவோம் வாரீர்.
என்றும் மக்கள் பணியில்
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் தவிசாளர், வலிமேற்கு பிரதேசசபை.

வலி வடக்கு, கிழக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிப்பு-

fdggவலி.வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துக்காக நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233ஏக்கர் நிலமுமே இவ்வாறு மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்குப் பின் தமது சொந்த மண்ணை இடம்பெயர்ந்திருந்த மக்கள் நேரில்சென்று பார்வையிட்டனர். வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 6ஆயிரத்து 800 ஏக்கர் நிலத்தில் ஒருபகுதி நிலம் கடந்த தைமாதம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்டமாக வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளில் மொத்தமாக 701.5 ஏக்கர் நிலம் நேற்று மீள்குடியேற்றதுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு பகுதியில், காங்கேசன்துறை தெற்கு, பளை வீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் மொத்தமாக 468.5 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. Read more

வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் ஆலய மற்றும் இல்ல பணிகளுக்கு நிதியுதவி(படங்கள் இணைப்பு)

photo (7)ஆலய திருப்பணிகள் மற்றும் இல்லப் பணிகள் என்பவற்றுக்காக மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து தண்ணீரூற்று ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலுக்கு 2 லட்சம் ரூபாவும், கணுக்கேணி கற்பகப் பிள்ளையார் கோவில், குமாரபுரம் சித்திரவேலாயுதர் கோவில், முள்ளிவாய்க்கால் பத்திரகாளியம்மன் கோவில், வற்றாப்பளைப் பிரம்மகுமாரிகள் நிலையம், சாய் சமுர்த்தி இல்லம் ஆகியனவற்றுக்கு ஒவ்வொன்றுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய், வீதமும் நேற்று (28.12.2015) வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிதியுதவியினை மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் வன்னி மேம்பாட்டுக் கழகம் மற்றும் சாய் சமுர்த்தி இல்ல தலைவர் திரு.தவராஜா மாஸ்டர் அவர்களும் கலந்துகொண்டார்.
Read more

அவன்ட் கார்ட் குறித்த அறிக்கை விரைவில் சமர்ப்பிப்பு-

evangardஅவன்ட் கார்ட் ஆயுத கப்பல் குறித்த விசாரணை அறிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2மாதங்களுக்கு முன்னதாக காலி கடற்பரப்பிற்கு 12கடல்மைல் தொலைவில் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுதக் கப்பலொன்று மீட்கப்பட்டது. இந்த ஆயுதக் கப்பல் குறித்து இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர். இந்த இரு தரப்பின் விசாரணைகளின் அறிக்கைகள் தயாராக இருப்பதாகவும் விரைவில் அவை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது. அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்காக போலியான தகவல்களை வழங்கியிருந்தது. பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய கடற்படையினர் குறித்த கப்பலை சோதனையிட்டபோது போலித் தகவல்களை வழங்கியமை தெரியவந்தது. வெகு விரைவில் இந்த இரு விசாரணை அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் சிறு நில அதிர்வு-

earth quakeகண்டி நகரை அண்மித்த பகுதிகளில் சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. நேற்றிரவு 10.17மணியளவில் கண்டி மற்றும் மாத்தளை பகுதிகளிற்கு அண்மித்த பிரதேசங்களில் நில அதிர்வு பதிவாகியதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி சீ.எச்.ஈ.ஆர் சிறிவர்ந்தன கூறியுள்ளார். 3 ரிக்டர் அளவுக்கும் குறைவான நில அதிர்வே பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். பல்லேகலையில் அமைந்துள்ள புவி சரிதவியல் ஆய்வு மையத்திலும் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. கண்டி, எல்லெபொல, வெவேகம, கிதுலெமட, மாரிபே தென்ன உள்ளிட்ட பல கிராமங்களில் குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என புவிச்சரிதவியல் தொடர்பான பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறியுள்ளார். நீர் நிலைகளுக்கு அருகில் இவ்வாறான அதிர்வுகள் ஏற்படுவது சாதாரணமான ஒரு விடயம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருபது தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழப்பு-

fgfவைத்தியர்கள் பற்றாக்குறையினால் 20 தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வைத்தியசாலைகளில் இரு வைத்தியர்கள் இருக்க வேண்டுமென்ற போதிலும் அநேகமான சந்தரப்பங்களில் ஒரு வைத்தியரே உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த வைத்தியசாலைகளுக்கு மேலுமொரு வைத்தியர் வீதம் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார். இதன் கீழ் மூதூர்,கிண்ணியா,பருத்தித்துறை,வெல்லவாய உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-

sfdfdfdfdfகைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவீரர்கள் சகலரையும் விடுவிக்குமாறு கோரி, கொட்டாவ போதிக்கு அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், ஜனாதிபதி ஆலோசகர் பெங்கமுவ நாலக்க தேரர் மற்றும் ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில உள்ளிட்ட பிரிவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் 03வது பொதுக்கூட்டம்-(படங்கள் இணைப்பு)

IMG_3203தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் 03வது பொதுக்கூட்டம் கழகத்தின் தலைவர் திரு.சு.காண்டீபன் தலைமையில் நேற்று 27.12.2015 ‘வன்னி இன்’ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. கழகத்தின் உறுப்பினர்களின் செயற்றிறனின்பால் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா உதவி மாவட்ட செயலாளர் கௌரவ நா.கமலதாசன் அவர்களுடன் கழகத்தின் ஸ்தாபகரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற அதிபர் திரு.பரஞ்சோதி, வேப்பங்குளம் பிள்ளையார் தேவஸ்தானத்தின் மதிப்பிற்குரிய மதகுரு கஜேந்திர ஷர்மா,இளைஞர் சேவைகள் அதிகாரி அஜித் சந்திரசேன, இளைஞர் கழக மாவட்ட சம்மேளன தலைவர் திரு.அமுதவாணன், இளைஞர் கழக மாவட்ட சம்மேளன பொருளாளர் முகிலன், கலைஞர் மாணிக்கம் ஜெகன், ஆசிரியர் சந்திரமோகன், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள், புதிதாக கழகத்தில் இணைந்த உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Read more