Header image alt text

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் 30 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு. (படங்கள் இணைப்பு)-

a - Copyயாழ். வேலணைப் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட தாய் தந்தையை இழந்த பிள்ளைகள் வயதான பெற்றோரின் பிள்ளைகள் மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் என சுமார் 30 பாடசாலை மாணவர்கள் கஸ்டமான சூழல் நிலைகளினால்

பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் அவர்கள் தொடர்ந்து கல்வியினைக் கற்பதற்கு மிக பிரதான தடையாக காணப்படும் பாடசாலை உபகரணங்களை தந்துதவுமாறு வேலணைப் பிரதேச செயலகத்தினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக இன்று வேலணைப் பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் முன்னிலையில் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் சுமார் 31875 ரூபா பெறுமதியான புத்தகப்பைகள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பேனாக்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் 30 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.     (வட்டு இந்து வாலிபர் சங்கம்)
Read more

தோழர் சுந்தரம் அவர்களின் 34ம் ஆண்டு நினைவுநாள் சுழிபுரத்தில் அனுஷ்டிப்பு-

P1110567மறைந்தும் மறையாது மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து வரும் தோழர் சுந்தரம் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு நாள் வட்டுக்கோட்டைத் தொகுதி தோழர்களால் நேற்று (07.01.2016) சுழிபுரத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இவ் நிகழ்வு தோழர் கண்ணன் அவர்களது தலைமையில் அன்றுமாலை 6.30 மணியளவில் அக வணக்கத்துடன் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக தோழர் சுந்தரம் அவர்களின் நிiவுருவப்படத்திற்கு முன்பாக அமரரது சகோதரனின் புதல்வர் போ.சிவகுமார் நினைவுச் சுடரினை ஏற்றினார். தொடர்ந்து தோழர் சின்னக்குமார், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் திரு. பா.கஜதீபன் ஆகியோர் நினைவுச் சுடர் ஏற்றினர். தொடர்ந்து அமரர் தோழர் சுந்தரம் அவர்களின் திரு உருவப்படத்திற்கு அமரரது சகேதரனின் புதல்வர் போ.சிவகுமார் அவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் தோழர்கள் பொதுமக்கள் உறவினர் என பலரும் மலர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. இவ் நிகழ்வின்போது வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களின் உரையும், ஜேர்மனியிலிருந்து தோழர் ஜெகநாதன், கொழும்பிலிருந்து புளொட் தலைவரும் பாராளுமன்ற உருப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன. Read more

இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு நோர்வே முழு ஆதரவு-

NORWAYவடக்கு, கிழக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புடன் செயற்படுவதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். மீள்குடியேற்றம் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை, இதனை நாங்கள் அவதானித்து வருகின்றோம் இவ்வாறு நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் தெரிவித்தார். ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த அவர் நேற்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இருதரப்பு பேச்சுகளில் ஈடுபட்டார். அதன்பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட பல்லின கலாசாரமே நாட்டை பலப்படுத்துகின்றது. வடக்கில் அமைதி பேணப்படுவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களது மீள்குடியேற்றம் என்பது இலங்கை அரசு முக்கிய கவனம் செலுத்தவேண்டிய அம்சங்களாகும். இது தொடர்பில் புதிய அரசும் முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடலின்போது பேசப்பட்டது. Read more

அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு-

rajithaஅரச சேவையாளர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 65ஆக உயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் சமர்பிக்க இருப்பதாக சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரச சேவையாளர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதற்கு தான் எதிரானவர் என்று அவர் கூறியுள்ளார். பானந்துறை ஸ்ரீ சுமங்கள ஆண்கள் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். கெம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களில் 85 வயதிலும் அறிவை வழங்கக்கூடிய பேராசிரியர்கள் இருப்பதாகவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய சரியான வயதில் இலங்கை அரச சேவையாளர்கள் ஓய்வு பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் ஆஜர், குமார் குணரட்ணம் விளக்கமறியலில்-

kumar gunaratnamமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சாட்சி வழங்குவதற்காக கடற்படை அதிகாரிகள் சிலரும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினமும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகளுக்கான ஆஜராகியிருந்தார். இதேவேளை முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னம் எதிர்வரும் 21ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 4ம் திகதி குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் செயற்பாடுகளுக்கும் ஜனாதிபதிக்கும் ஐ.நா செயலாளர் பாராட்டு-

ban ki moonஇலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி முதலாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்டபான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்நாட்டு மக்களுக்கு நீண்ட கால அமைதி, நிலையான தன்மை மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட, விரிவான சீர்திருத்தப்பட்ட வேலைத்திட்டத்திற்கான அரசின் அர்ப்பணிப்பை ஐ.நா செயலாளர் மதிப்பதாக தெரிவித்துள்ளார். நல்லாட்சியை ஏற்படுத்துதல் மற்றும் பலமிக்க சகவாழ்வுக்காக கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் முன் வைக்கப்பட்ட யோசனைகளின் முதல் கட்டம் செயல்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்வதுடன் அதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் ஐநா செயலாளர் கூறியுள்ளார். நீண்டகால அரசியல் தீர்வுக்காக நாடு பூராகவும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் காட்டும் அக்கறைக்கு உதவியளிப்பதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கான அரசின் முயற்சிகளை பாராட்டியுள்ள பான் கீ மூன் அதற்காக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்க லே இயக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு-

sqஸ்டிக்கர் இயக்கமாக அண்மையில் தொடங்கப்பட்ட ‘சிங்க லே’ இயக்கத்தினர், நேற்று முன்தினம் மாலை, ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி, தங்களது இயக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். யக்கலமுல்லே பாவர தேரரே இந்த சிங்களே இயக்கத்தின் தலைவர் ஆவார். அவர், ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேசியது இதுவே முதல் தடவையாகும். தமது இயக்கம் ‘சிங்கள ஜாதிக பலமுலுவ’ என அழைக்கப்படும் என்றும் இது, புத்தரின் போதனையான ‘சகல உயிர்களும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் இதன்போது கூறினார். முன்னர் பொதுபல சேனாவின் செயற்பாட்டாளராக இருந்த மிதில்லே பஞ்ஞலோக்க தேரரே இப் புதிய இயக்க பொதுச் செயலாளர் ஆவார். அரசியல் பூசல்களைத் தமது இயக்கத்தினுள் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவ்வியக்கம் இதன்போது அறிவித்துள்ளது.

ஹிருணிகாவை கைதுசெய்ய முடியாது-அமைச்சர் ராஜித-

hirunikaகொழும்பு தெமட்டகொடயில் இடம்பெற்ற கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவைக் கைது செய்யுமாறு, எதிரணியினராலும் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டுவரும் கோஷத்துக்காக, அவரைக் கைது செய்யமுடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘மஹிந்த ராஜபக்ஷவை ஏன் கைது செய்யவில்லை, நாமல் ராஜபக்ஷவை ஏன் கைது செய்யவில்லை என்று எல்லோரும் கோஷமெழுப்பி வருகின்றனர். எனினும், அவையனைத்தும் அரசாங்கத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டள்ளது’ என்று அவர் பதிலளித்தார். ‘அவ்வாறு எடுத்தவுடன் கைதுசெய்வதற்கு இது ராஜபக்ஷவினுடைய அரசாங்கம் அல்ல, இது சிறிசேனவினுடைய அரசாங்கம்’ என்றும் அவர் கூறினார். Read more

கலாசாரத்தைப் பாதுகாக்கும் பணியில் தமிழ் மக்கள் பேரவை-

peravaiதமிழ் மக்கள் பேரவையானது தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது. அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையானது கடந்த 2 ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தயாரிக்கும் நிபுணர்களடங்கிய உபகுழுவின் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தது. அந்த உபகுழுவின் பணி வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் உயரிய நோக்குடன் துறைசார் வல்லுநர்களடங்கிய உபகுழுவை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்குழுவில் கலை, கலாசாரத்துடன் சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்களை இணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஒரு இனத்தின் எதிர்கால வளமும் வாழ்வியலும் தனித்து அரசியல் உரிமைகளால் மட்டும் தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை. மாறாக அந்த இனத்தின் மரபுரிமைகளும் கலை, கலாசாரப்பண்பாட்டு அடையாளங்களும் கட்டிக்காக்கப்படுவதிலும் தங்கியுள்ளதென்ற உண்மையை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது. Read more