Header image alt text

தமிழ் மக்கள் பேரவையின் வரைபு நோர்வேயிடம் கையளிப்பு-

peravaiதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு உத்தியோகபூர்வமாக இன்று நோர்வே அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பேரவையின் செயற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினரான சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரால் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஷொப்ஜோர்ன் கோஸ்டாட்செசரிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து, நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடலின்போது, நோர்வேயின் சமாதான மத்தியஸ்தம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் தமிழ் மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பு குறித்து தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்களால் இதன்போது நோர்வே தூதருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான இறுதித் தீர்வினைப் பெற்றுத்தரவும், இறுதி யுத்தத்தில் அரங்கேறிய மனிதப் படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தார்மீகப் பொறுப்பும் நோர்வே நாட்டிற்கு உள்ளதாக தமது பிரதிநிதிகள் எடுத்துக்கூறியதாக தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரவை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய குரல் எழுப்புதலுக்கு இம்முறை தமிழ் மக்கள் பக்கம் சார்ந்து நின்று, சர்வதேச விசாரணைக்கான தமது குரலைப் பலப்படுத்துமாறும் தமிழ் மக்கள் பேரவை நோர்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் கிராம அபிவிருத்தி திணைக்களங்கள் மற்றும் மாதர் சங்கங்களுக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

thunukai thalapadam1முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்பவற்றுக்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான 2015ஆம் ஆண்டின் மூலதன நன்கொடை நிதியிலிருந்து தளபாடங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களுடன், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர், மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசபைத் தலைவர், செயலாளர், ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

வடக்கு சமஷ்டி யோசனைக்கு மேல் மாகாண சபை எதிர்ப்பு-

peravaiவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிராந்தியமாகவும், ஏனைய மாகாணங்கள் ஏழையும் இணைத்து சிங்கள மொழியை அடிப்படையாகக் கொண்ட வேறு பிராந்தியமாகவும் நிர்வகிக்கவேண்டும் என்று வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானத்தை, மேல் மாகாண சபை ஏகமனதாக நிராகரித்துள்ளது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 15 பேர் ஒன்றிணைந்து, அவைக்கு நடுவே நேற்று அமர்ந்திருந்து, வடமாகாண சபையின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் நிஸாந்த ஸ்ரீவர்ணசிங்க, இந்த நிராகரிப்பு யோசனையை முன்வைத்தார். அதனை, ஐ.தே.கட்சி உறுப்பினர் ஜோர்ஜ் பெரேரா வழிமொழிந்தார்.

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்-

aarpattam (2)நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள், ஆளுனர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பல வருடங்களாக ஊதியமின்றி பணியாற்றிவரும் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள், நிரந்தர நியமனம் கோரி 11ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர் ஆசிரியர்கள், ஆளுனர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகள் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆளுனர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனையடுத்து மீண்டும் மாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக சென்ற கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.

வட்டுவாகல் சப்த கன்னிகள் ஆலய இராஜகோபுர அடிக்கல் நாட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
vaddu.4JPGமுல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் சப்த கன்னிகள் ஆலயத்தின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றபோது அந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து கொண்டிருந்தார். 
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த அடிக்கல் நாட்டு விழாவின்போது சப்த கன்னிகள் ஆலபத்தில் புராதனகால கலைவண்ணத்துடன் கூடிய மண்குடம் ஒன்று பன்னிரெண்டு அடி ஆழத்துக்கும் அப்பால் கண்டு எடுக்கப்பட்டிருந்தது. இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது. 

Read more

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை-

parliamentபாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பாலித்த தேவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு எதிராக மேற்கொள்ளக் கூடிய, உயரிய ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சிலர் கூச்சலிட்டமையால், பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இதேவேளை, இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் தொடர்ந்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதால் அதனை இன்றுவரை ஒத்திவைப்பதாகவும், இந்த சம்பவத்தை தான் கண்டிப்பதாகவும் சபாநாயகர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more

குமுழமுனையில் வேள்ட்விஷன் நிறுவனத்தாரின் கௌரவிப்பு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
world vision.4JPGமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குமுழமுனை கிராமத்தில் வேள்ட்விசன் நிறுவனத்தினர் முதியவர்களை கௌரவித்தல், பல்கலைக்கழகத்துக்கு அனுமதி கிடைக்கப்பெற்ற மாணவர்களை கௌரவித்தல் மற்றும் வன்னி மேம்பாட்டுப் பேரவையினால் இரண்டு மாணவர்களுக்கு கணனி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டபோது, 
கரைதுறைபற்று பிரதேச செயலாளர் கரைதுறைபற்று உதவிப் பிரதேச செயலாளர் வேள்விசன் நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் குமுழமுனை பிரதேச வைத்தியர் கிராமசேவகர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செயலாளர் ஆகியோரும் அதிதிகளாக கலந்துகொன்டிருந்தனர். மேற்படி பொதுநோக்கு மண்டபத்துக்கான மின் இணைப்பு மற்றும் மின் உபகரணங்களையும் மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் வழங்கி வைத்தார்.

Read more

மரண அறிவித்தல்

Posted by plotenewseditor on 3 May 2016
Posted in செய்திகள் 

மரண அறிவித்தல்-

aanaaகுருநாகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிதம்பரபுரத்தை வாழ்விடமாகவும் கொண்ட எமது அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ராசலிங்கம் மகேஸ்வரன் அவர்கள் (02.05.2016) திங்கட்கிழமை அகால மரணமானார்.

துணிவும், நேர்மையும், துடிப்பும் மிக்க இவர், தனது அன்பாலும் தொண்டுகளாலும் மக்களின் மனதில் இடம்பிடித்தவர். சமூக மேம்பாட்டில் அதீத அக்கறை கொண்டு தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்.

அன்னாரது இழப்பினை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் சொல்லொணாத் துயர் சுமந்து ஆறாத் துயரோடு, அஞ்சலித்து எம்தேசத்து நேச நெஞ்சங்களுக்கும் அறியத்தருகின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)plote

குறிப்பு – அன்னாரின் பூதவுடல் வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வியாழக்கிழமை பிற்பகல் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது. தொடர்புகட்கு : (0775157375 – சகோதரி)

சர்வதேச ஊடக தினம் யாழில் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)

oodaka ninaivu (4)சர்வதேச ஊடக தினம் நேற்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. உதயன் குழுமத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஊடக தின ஆரம்ப நிகழ்வாக மரணித்த ஊடகவியலாளர்களின் நினைவாக யாழ். பண்ணைக் கடற்கரையில் மரம் நாட்டுதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் மரணித்த 13ஊடகவியலாளர்களின் உருவப்படங்களுக்கும் மலராஞ்சலி செலுத்தி நினைவுச்சுடர் ஏற்றப்பட்ட மௌனாஞ்சலியும் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், ஆகியோரும், மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், எஸ். சுகிர்தன், ஆனோல்ட் ஆகியோரும்; மேலும் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். Read more

முத்தையன்கட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றிய கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

muththaiyankattu (5)முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தின் புனரமைப்பு வேலைகள் இடம்பெறுவதால் தற்காலிகமாக விவசாயத் தொழிலை இழந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உலக வங்கியின் அனுசரணையுடன் அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக அவர்களது குடிநீர்ப் பிரச்சனை மற்றும் காசுக்கான வேலை வழங்குதல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்), வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் நிரஞ்சன், உலக வங்கியின் இலங்கைப் பிரதிநிதி, வடமாகாண நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் சிறீஸ்கந்தராசா மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர் Read more

யாழ். கந்தரோடை மேற்கு ஞானவைரவர் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பும்-(படங்கள் இணைப்பு|)

P1370219யாழ். கந்தரோடை மேற்கு ஞானவைரவர் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கடந்த 30.04.2016 சனிக்கிழமை முன்பள்ளியின் தலைவரது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வலிதெற்கு பிரதேச சபையின் முன்னைநாள் தவிசாளர் திரு. ரி. பிரகாஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு கொடியேற்றம் மற்றும் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பெற்றோர் மற்றும்; கிராம மக்களும் பெருமளவில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுத்திருந்தனர். Read more