பிரித்தானியாவின் வட ஐரிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஐன் பைஸ்லி, பிரித்தானிய பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை மீறி செயற்பட்டமையால் அவர், 7 கிழமைகள் பாராளுமன்ற பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஐன் பைஸ்லி, தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்துக்கான முழுச் செலவான £ 100,000களை இலங்கை அரசாங்கம் ஏற்றிருந்தது. இதன்மூலம் பிரித்தானியா பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை அவர் மீறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more
அமெரிக்க கடற்படையின் சிறப்பு பிரிவுடன் இலங்கை கடற்படையினர் இணைந்து திருகோணமலையில் கூட்டு இராணுவப் போர் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். ‘கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி ஒத்திகை’ என்ற பெயரில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் சில இன்றும் மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சமீபமாக, ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் இன்று மாலை 6.30 மணியளவில் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
யால தேசிய பூங்காவை பார்வையிடுவதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, மத்தள தேசிய விமான நிலையத்துக்கு, உள்நாட்டு சேவைகளை பயன்படுத்தும் வகையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளனர்.
வெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.