இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 250 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களில் 50 பேர் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் மக்களைத் தெளிவூட்டும் அதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.
குறித்த 50 பட்டதாரிகளும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள ஏனைய 200 பட்டதாரிகளையும் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார். Read more
எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள பாடசாலை மட்ட பரீட்சைகளை வேறொரு தினத்தில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சிடம், கல்வி பாதுகாப்பு தொழிற்சங்க ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் உத்தேசம் இல்லை என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். யாழப்ப்hணம் இந்து கல்லூரியில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் வைத்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
மன்னார் பழைய சதொச கட்டடத்தொகுதி இருந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழியில் இருந்து, இதுவரையில் 44 மனித எலும்புக் கூடுகள் மற்றும் அவற்றின் உடல் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.