Header image alt text

மத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை இந்திய விமான நிலைய அதிகார சபைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் எவ்வித யோசனைகளும் இல்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் ஜயந்த் சிங் நேற்றைய இந்திய சட்டமன்ற அமர்வின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். மத்தளை சர்வதேச விமான நிலையத்தை கையகப்படுத்துவதற்கு இந்திய அரசிற்கு சொந்தமான விமான நிலைய அதிகார சபைக்கு ஏதேனும் திட்டங்கள் காணப்படுகின்றதா என பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் புனம் மஹஜித் நேற்று கேள்வி எழுப்பினார். Read more

வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரனை, அந்த அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா? என்பது தொடர்பில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதியன்று, இந்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள, உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்மானித்தது. Read more