வரலாறு உங்களுக்கு வழங்க முன்வந்துள்ள தலைமைப் பாத்திரத்தை நீங்கள் ஏற்று முன்னெடுக்கத் தயாரா என தமிழ் மக்கள் பேரவையும் மக்களும் நீண்ட காலமாக என்னிடம் கேட்டு வருகின்றார்கள்.
இதற்குப் பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதை ஏற்றுக் கொள்கின்றேன்’ என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் நிரந்தர அலுவலகம் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடச் சந்திக்கு அண்மையாக நேற்று (31) வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. அதனைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களின் ஒருவரான முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
Read more
புத்தளம் மாரி அம்மன் கோவிலின் உள்ளே நுழைந்த ஒருவர் அங்கிருந்த பணம் மற்றும் இயந்திரம் ஒன்றை திருடிச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முதன் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக இன்று முதல் 100 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.