வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் அதனை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். காவல் நிலையத்திற்கு அருகாமையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே இன்று காலை 9.00 மணி முதல் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமலும் இருக்கின்றன. கிழக்கில் சமாதான மாதா மரண பங்கத்தில் இருக்கும் நிலையில், வடக்கிலும் சமாதானம் சீர்குலைவது ஆபத்து என்பதால் சமாதானத்தை பாதுகாத்து, உலக சமாதானம் உருவாக வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் தெரிவித்துள்ளார்.